பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த உளவாளியை மீட்பதற்காக சோமாலிய பயங்கரவாதிகளுடன் பிரெஞ்சு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் பலன் தரவில்லை.
இந்த மோதலின்போது, 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பிணைக் கைதியை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பிரான்ஸ் தரப்பில் அதன் வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இந்த அதிரடி தாக்குதலை பிரான்ஸ் ராணுவத்தின் டிஜிஎஸ்இ ரகசிய பாதுகாப்பு சேவைப் பிரிவு மேற்கொண்டது.
இது குறித்து, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜீன்-வெஸ் லீ டிரியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிரான்ஸ் நாட்டின் உளவாளி டெனிஸ் அலெக்ஸ் கடந்த 2009ஆம் ஆண்டு சோமாலிய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார். மூன்றரை ஆண்டுகளாக அவரை மீட்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பயங்கரவாதிகள் மறுத்து விட்டனர். பயங்கரவாதிகளால் துன்புறுத்தப்பட்டு வரும் அலெக்ûஸ மீட்பதற்காக, டிஜிஎஸ்இ ரகசிய படையினர் வெள்ளிக்கிழமை இரவு அதிரடி தாக்குதல் நடத்தினர் என்றார்.
எனினும், பிணைக் கைதி அலெக்ஸ் உயிரிழந்ததாக வெளியான தகவலை மறுத்துள்ள ஷெபாப் பயங்கரவாத அமைப்பு, அடுத்த 2 நாள்களில் அலெக்ஸின் தலைவிதி பற்றி முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் அரசு தனது ராணுவ வீரர்கள் மீது எந்த அளவுக்கு அக்கறையின்றி செயல்படுகிறது என்பது தங்களது வீரர்களை பலிகொடுத்ததிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது என்று ஷெபாப் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
ஞாயிறு, 13 ஜனவரி, 2013
கடவுள் தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும்: நடிகர் அஜித்குமார்
ஆங்கிலேயரை விட இந்தியாவில் ஊழல் தலைவர்கள் இன்னும் அதிகமாகவே சுரண்டி உள்ளனர் என்று நடிகர் அஜித் கூறியுள்ளார்.
நடிகர், நடிகைகளுக்கு சேவை வரிவிதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் சமீபத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இதில் நடிகர், நடிகைகள் இயக்குனர்கள், உள்ளிட்ட அனைத்து திரைப்பட சங்கத்தினரும் பங்கேற்றார்கள்.
ஆனால் அப்பொழுது விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் இருந்ததால் அஜித் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் சேவை வரிவிதிப்பு குறித்து நடிகர் அஜித் அளித்துள்ள பேட்டியில், இரயில் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்து என்ன நடக்குமோ எனத் தெரியாது. நான் திரை உலகினர் மீது சுமத்தப்பட்டுள்ள சேவை வரி பற்றி மட்டும் குறிப்பிடவில்லை.
கட்டண உயர்வு, வரி விதிப்புக்குப் பதிலாக, நமது நாட்டிலுள்ள ஊழல் தலைவர்கள் மோசடி மூலம் சம்பாதித்த பணத்தை நம் நாட்டு அடிப்படைத் தேவைகள் வளர்ச்சிக்காக செலவு செய்ய முன்வந்தாலே போதும்.
நமது நாடு வளர்ந்த நாடுகளில் ஒன்றாகவோ, டாப்-10 பணக்கார நாடுகளில் ஒன்றாகவோ மாறும்.
ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆண்டு இங்கிருந்து மொத்த வளங்களையும் வாரிச் சுருட்டிக் கொண்டு சென்றனர்.
இந்த உண்மையை நாம் மக்களுக்கு புரிய வைத்தால் அவர்கள் மீண்டும் சிந்திப்பார்கள்.
ஆனால் ஆங்கிலேயரை விட நமது நாட்டில் உள்ள ஊழல் தலைவர்கள் இன்னும் அதிகமாகவே சுரண்டி உள்ளனர்.
கடவுள்தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும், என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானிடையே கடும் சண்டை:
எல்லையில் தொடர் பதற்றம்
இந்தியா, பாகிஸ்தான் இராணுவ வீரர்களிடையே நேற்றிரவு கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது.
ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சில ஊடுருவல்காரர்கள் இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர்.
இதையடுத்து அவர்களைத் தடுக்கும் முயற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டனர்.
இந்திய வீரர்களை திசை திருப்புவதற்காக பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர்.
இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர்.
இருதரப்புக்கும் இடையிலான மோதல் நீண்ட நேரம் நீடித்தது. இரவு 9.45 மணிக்கு தொடங்கிய துப்பாக்கிச் சண்டையால் இப்பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சண்டையில் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது காயமடைந்த வீரர்களின் எண்ணிக்கை ஏதும் உடனடியாகத் தெரியவில்லை.
ஊடுருவல்காரர்களை நோக்கி இந்திய வீரர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கியவுடன் அவர்கள் எல்லைக் கோட்டுப் பகுதியிலிருந்து பாகிஸ்தானுக்குள் சென்றுவிட்டதாக கர்னல் பால்டா தெரிவித்தார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து மீறி வருகிறது.
எல்லையில் இரண்டு வீரர்கள் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு இந்திய இராணுவம் கடும் அதிருப்தி தெரிவித்ததோடு, எல்லையில் படைகளைகுவித்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவும் இத்தகைய தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது{புகைப்படங்கள்,}
சனி, 12 ஜனவரி, 2013
மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறுடன் உயிர் வாழும் அதிசய பிரிட்டன் மனிதர்.
பிரிட்டனில் உள்ள ஒருவர், தன்னுடைய உடலில் 15 இடங்களில் உடைந்த எலும்புகளுக்காக 34 இடங்களில் அறுவை சிகிச்சை செய்ததோடு, மாரடைப்பு நோயையும் சந்தித்து, சிறுநீரக கோளாருடன் அதிசயமாக உயிர் வாழ்ந்து வருகிறார். அவரது உடலில் செயல்பாடுகளைக் கண்டு, மருத்துவர்களே அதிசயிக்கின்றனர்.
Terry White என்ற 67 வயது பிரிட்டன் மனிதர், தன்னுடைய இடுப்பில் ஆறு இடங்களில் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். உடலின் பல்வேறு இடங்களில் உடைந்துள்ள 15 எலும்புகளை ஒன்று சேர்ப்பதற்காக 34 முறை அறுவைசிகிச்சை செய்துள்ளார். இதுமட்டும் போதாது என்று அவருக்கு அடிக்கடி மாரடைப்பும் வருமாம். இதுவும் போதாதென்று சிறுநீரகமும் வேலை செய்யாமல் பழுதடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவருக்கு கொடுக்கப்பட்ட தொடர் சிகிச்சையால் அவர் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருவதைக் கண்டு, மருத்துவர்களே அதிசயிக்கின்றனர்.
இவருக்கு செய்யப்பட்ட 34 அறுவை சிகிச்சைகளில் 21 அறுவை சிகிச்சை மிகவும் கடினமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூன்று மேஜர் அறுவை சிகிச்சைகள் 10 நாட்கள் இடைவெளியில் மட்டுமே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் அனைத்து வெற்றி பெற்றதற்கு அவருடைய தன்னம்பிக்கையே பெரும் உதவியாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.
மாணவர்களின் வீட்டு முகவரிகள் பெறப்பட்டு, அவர்களது
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பலரது வீட்டு முகவரிகள் பெறப்பட்டு இனம் தெரியாத நபர்களினால் அவர்களது வீடுகளுக்கு அநாமதேய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர்.
தங்களது வீட்டு முகவரிகள் இந்த அநாமதேய நபர்களுக்கு எவ்வாறு கிடைக்கப் பெற்றது என்பது குறித்தும் இவ்வாறு கிடைத்துள்ள முகவரியால் எதிர்காலத்திலும் தாங்கள் அச்சுறுத்தப்படலாம் என மாணவர்களும் பெற்றோர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.
மாணவர்களின் முகவரியினை பெற்றுக் கொள்ளும் அளவிற்கு இந்தக் குழு செயற்ப்பட்டுள்ளது. இதனை வைத்துப் பார்க்கும் போது அரசியல் செல்வாக்குடைய குழு ஒன்றினாலே இக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என மாணவ்ர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களது வீட்டு முகவரிகள் எவ்வாறு கிடைத்தன? அவ்வாறு அவர்களுக்கு வழங்கியது யார் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக் கடிதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் தமிழ்த் தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகளை குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அரசியல் சார்ந்த விடயங்களிலும் ஈடுபட வேண்டாம் எனவும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
வெள்ளி, 11 ஜனவரி, 2013
மனைவியின் தொலைபேசி அழைப்பை கேட்டு பாஸ்போர்ட்டை கிழித்தெறிந்ததால்
இத்தாலி செல்வதற்காக, விமானத்தில் அமர்ந்திருந்த நபர், மனைவியிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பால், பாஸ்போர்ட்டை கிழித்தெறிந்தார்.
பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது குஜராத் மாவட்டம். இந்த பகுதியை சேர்ந்தவர் பைசல் அலி; வேலை நிமித்தமாக, இத்தாலிக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக, நேற்று முன்தினம், லாகூர் விமான நிலையத்திற்கு சென்று, விமானத்தில் ஏறி அமர்ந்தார். விமானம் புறப்படுவதற்கு முன், இவர் மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. கணவன் வெளிநாடு செல்வதை விரும்பாத மனைவி, தொலைபேசியிலேயே கதறி அழுதார்.
இதனால், மனம் உருகிய பைசல் அலி, விமானத்திலேயே, தன் பாஸ்போர்ட்டை கிழித்து எறிந்தார். இது குறித்து, விமான ஊழியர்கள் விசாரித்த போது, "நான் வெளிநாடு செல்வதை மனைவி விரும்பவில்லை. அவள் அழுவதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. எனவே, இத்தாலி செல்லும் முடிவை கைவிட்டு, பாஸ்போர்ட்டை கிழித்தெறிந்தேன்' என்றார்.
விமான நிலையத்திலிருந்து வெறுங்கையோடு வெளியேறிய, பைசல் அலியை அனுமதிக்க, விமான நிலைய அதிகாரிகள் மறுத்து விட்டனர். அதன் பின், அவர், தான் கிழித்தெறிந்த பாஸ்போர்ட்டை எடுத்து வந்து, அதிகாரிகளிடம் காட்டினார். இதையடுத்து, அவரை, அதிகாரிகள், வெளியே செல்ல அனுமதித்தனர்
வேகமாக பரவி வரும் காட்டுத் தீ: வீடுகள் எரிந்து நாசம்
| நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு ஏராளமான வீடுகள் எரிந்து சாம்பலாகி உள்ளன. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் 150க்கும் அதிகமான ஹெக்டேர் வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியுள்ளது. இதனால் ஏராளமான வீடுகள் எரிந்து சாம்பலாகி உள்ளதுடன், அப்பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காட்டுத் தீயை அணைக்கும் பணியில், ஹெலிகாப்டர்கள் மற்றும் 20 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. காட்டுத் தீ விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில், கிறிஸ்ட்சர்ச் பகுதியில் 185 பேர் உயிரிழந்தனர், அதனை தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை மிக மோசமான இயற்கை சீற்றமாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். |
மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்: 115 பேர் பலி
இங்கு தான் ஷியா முஸ்லீம்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள் என்பதால், தொடர்ந்து சன்னி முஸ்லீம்கள் இந்தப் பகுதியைக் குறி வைத்துத் தாக்கி வருகின்றனர்.
இங்கு வசிக்கும் ஷியா பிரிவினர் பெரும்பாலும் ஆப்கானிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள பில்லியர்ஸ் அரங்கொன்றில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 85 பேர் வரை கொல்லப்பட்டனர், இதனால் அப்பகுதியே போர்க்களம் போன்று காட்சியளித்தது.
இறந்தவர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன, காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றனர், ஆனால் மருத்துவமனைகளில் இடமில்லாமல் அவை நிரம்பி வழிந்தன.
குவெட்டா தவிர மிங்கோரா என்ற இடத்தில் நடந்த இன்னொரு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் நேற்று மொத்தம் 4 இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.
வியாழன், 10 ஜனவரி, 2013
பூமகள் சனசமூகநிலையம் இணையத்துக்கு அனுப்பிய பதில்
சிறுப்பிட்டி இணைய நிர்வாகத்தினருக்கு உங்கள் இணையத்தில் பூமகள் சனசமூகநிலைய நிர்வாகத்தினருக்கு எழுதிய செய்தி படித்தோம் அதற்கு பதிலலளிக்கும் முகமாக
நீங்கள் எமது கிராமத்தில் மேற்கொண்டுவரும் நற்பணிகளை அறிவோம் ஆதலால் எமது பூமகள் சனசமூகநிலையம் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதோடு எமது கிராமமுன்னேறத்துக்குஆகவும் கிராம மக்களின் முன்னேறத்துக்குஆகவும் நாம் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்துடன்இணைந்து இனி வரும் காலங்களை வளமானதாக்க முடிவு செய்துள்ளோம்
ஒற்றுமையே உயர்வு தரும்
பின்குறிப்பு :நன்றி உங்களின் பதில் கடிதத்துக்கு காலமறிந்து நீங்கள் எடுத்த முடிவால் இந்த இணையமும் சிறுப்பிட்டி மேற்கு (தாய்) ஒன்றியமும் பெரு மகிழ்வு கொள்கின்றது.இதற்க்கான வெளிப்படையான எமது பதில் மிக மிக விரைவில் இணையத்தில் பதிவிடப்படும். பதிவிட்ட கணமே செயல் பாட்டிலும் இறங்கும். நன்றி
செயல்பாட்டுடன் கூடிய ஒற்றுமையே நீண்ட கால பலனை நம் உறவுகளுக்கும் எமக்கும் நிறைவைதரும்.
சிறுப்பிட்டி மேற்கு லண்டன் கிளை ஒன்றியத்தினரே உங்களுக்கான காலம் இன்னும் இரண்டு நாட்க்களே சிந்தித்து கிராம நலன் கருதி உங்களின் முடிவை இணைய மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்
38 மாணவர்கள் பயணித்த பள்ளிப் பேருந்தில் தீ
உச்சிப்பனிச் சறுக்கு விளையாட பெல்ஜியத்திலிருந்து இத்தாலிக்குக் குழந்தைகளை ஏற்றி வந்த பேருந்து யூரி மாநிலத்தில் திடீரென தீப்பிடித்தது.
உடனே ஓட்டுநர் சாலை ஓரமாக வண்டியை நிறுத்தி 38 மாணவர்களையும் பாதுகாப்பாக இறக்கிவிட்டார்.
உடன் சென்ற 7 பெரியவர்களும் எவ்வித ஆபத்துமின்றி உயிர் தப்பினர்.
கோத்தார்டு குகைப்பாதைக்குள் நுழையும் இடத்தில் கடந்த 8ம் திகதி அதிகாலை 5 மணியளவில் A2 நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்ததாக யூரி மாநிலப் பொலிசார் தெரிவித்தனர்.
கோட்ஹார்டு தீயணைப்புப் படை வீரர் தீயை அணைத்தனர். 12000 ஃபிராங்க் மதிப்பிலான பொருட்சேதம் இத் தீவிபத்தில் ஏற்பட்டுள்ளது.
பொலிசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 20 அன்று கோட்ஹார்டு குகைப்பாதையில் காரும் சரக்குப் பெட்டக வண்டியும் மோதியது குறிப்பிடத்தக்கது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






























