siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 16 ஜனவரி, 2013

வெலிஓயா புதுக்காடு பாடசாலை

அட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட வெலிஓயா புதுக்காடு இலக்கம் இரண்டு பாடசாலையில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் இந்தப்பாடசாலையில் கல்விகற்கின்ற மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அட்டன் - வட்டவளை பிரதான பாதையில் செனன் தோட்டத்துக்கு அருகிலிருந்து 4 கிலோ மீற்றர் தூரமுள்ள இந்தப் பாடசாலையில் தரம் ஐந்து வரை வகுப்புக்களை உள்ளதோடு 80 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். சீடா திட்டத்தின் மூலம் கட்டிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள போதும் உரிய பராமரிப்புக்கள் இடம் பெறாத காரணத்தினால் இந்தப்பாடசாலை நாளுக்கு நாள் பாழடைந்து வரும் நிலையை அடைந்துள்ளது. வகுப்பறை கட்டிடங்களிலுள்ள கதவுகள், சாளரங்கள், தரை என்பன சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. ஆசிரியர் விடுதிகள் பாழடைந்துள்ளன. மலசலக்கூடங்களின் கதவுகள் அகற்றப்பட்டுள்ளன. குடிநீர் வசதிகள் இல்லை. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலேயே இந்தப்பாடசாலையின் மாணவர்கள் கல்விக் கற்று வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் இந்தப்பாடசாலையில் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு பல வாக்குறுதிகளை வழங்கி சென்ற போதும் இதுவரை எந்த உதவிகளும் கிடைக்கவில்லையென பெற்றோர் கூறுகின்றனர். இந்தப்பாடசாலையில் தற்போது கடமையாற்றும் அதிபர் வருகை தந்து குறுகிய காலமென்பதால் இந்தப்பாடசாலையைச் சிறந்த சுற்றாடல் உள்ள பாடசாலையாக மாற்றிக்காட்டப்போவதாக கருத்துத் தெரிவித்தார். இந்த நிலையில் தோட்டக்குடியிருப்புக்கு அருகிலுள்ள இந்தப்பாடசாலையை முன்னேற்றுவதற்கு பெற்றோரின் அக்கறையும் தேவையென சுட்டிக்காட்டப்படுகின்றது. இதே வேளை அட்டன் கல்வி வலய அதிகாரிகள் இந்தப்பாடசாலைக்கு விஜயம் செய்து உரிய பரிகாரங்களை மேற்கொள்வது இன்றியமையாததாகும்

செவ்வாய், 15 ஜனவரி, 2013

பாகிஸ்தான் பிரதமரை கைது செய்ய கோர்ட் உத்தரவு

பாகிஸ்தான் பிரதமர், ராஜா பர்வேஸ் அஷ்ரப்பை கைது செய்ய பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள 2010-ம் ஆண்டு அவர் நீர் ஆதாரம் மற்றும் எரிசக்தி துறையின் மந்திரியாக பதவி வகித்தார் அப்போது தனியார் நிறுவனங்களுக்கு மின்சாரம் தயாரிக்க அனுமதி வழங்குவதற்கு 3.7 மில்லியன் டாலர்களை லஞ்சமாக வாங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் அரசு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்ப லஞ்சம் வாங்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், ராஜா பர்வேஸ் அஷ்ரப், மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 15 பேரை கைது செய்யும்படி, தலைமை நீதிபதி இப்திகார் முஹம்மத் சவுத்ரி உத்தரவிட்டுள்ளார்

ஆக்ரோஷமாக பதிலடி கொடுங்கள்: இந்திய தளபதி

காஷ்மீரில், பாகிஸ்தானிய இராணுவம் துப்பாக்கியால் சுட்டால், ஆக்ரோஷமான பதிலடி தருமாறு இந்திய இராணுவத்தின் தலைவர் தனது தளபதிகளிடம் தெரிவித்துள்ளார். காஷ்மீர் தொடர்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு முறை யுத்தமிட்டுள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் காஷ்மீர் பகுதியில் நடந்த மோதல்களில் இந்தியச் சிப்பாய்கள் இருவரும் பாகிஸ்தானியச் சிப்பாய்கள் இருவரும் கொல்லப்பட்டிருந்தனர். காஷ்மீரின் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் பதற்றங்களைத் தணிப்பதற்கும் பாகிஸ்தானிய இராணுவம் துப்பாக்கியால் சுட்டால், ஆக்ரோஷமான பதிலடி தருமாறும் இந்திய இராணுவத்தின் தலைவர் தனது தளபதிகளிடம் தெரிவித்துள்ளார்.

பெண்ணிடம் கத்தியை காட்டி பயமுறுத்தி பாலியல்!

தனிமையிலிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி பயமுறுத்தி அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முகமூடியணிந்திருந்த நபரை பதுளைப் பொலிஸார்; நேற்று கைது செய்துள்ளனர். பதுளைப் பகுதியைச் சேர்ந்த உடுவரை என்ற இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடுவரை என்ற இடத்தின் வீடொன்றில் ஏனையவர்கள் மரண வீடொன்றிலிருந்தமையினால் 58 வயது நிரம்பிய இரு பிள்ளைகளுக்கு தாயாரான மேற்படி பெண் மாத்திரமே வீட்டிலிருந்துள்ளார். அவ்வேளை உறவினர் போன்று குரல் கொடுத்து, அந்நபர் கதவைத் தட்டிய போது கதவைத் திறக்க, கத்தியை காட்டி பயமுறுத்தி அப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி தப்பிச் சென்றுள்ளார். காட்டப்பட்ட கத்தியை அப்பெண் பிடிக்க முயற்சித்த போது எதிர்பாராதவிதமாக அப்பெண் காயத்திற்குள்ளாகியுள்ளார். இதனையடுத்து பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். குறித்தப் பெண் செய்த முறைப்பாட்டினையடுத்து உடுவரையைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

தைத்திருநாளை ஆனையிறவில் கொண்டாடிய

தைத்திருநாளை கொண்டாடிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இராணுவ தளபதி ஜகசூரிய ஆகியோர் நேற்று யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். யாழ். ஆனையிறவு பாதுகாப்பு படை தலைமையகத்தில் யாழ். மாவட்ட பாதுகாப்பு கட்டளை தளபதி மகிந்த ஹத்துருசிங்க தலைமையில் நடைபெற்ற நிகழ்விலேயே இவர்கள் இருவரும் கலந்துகொண்டனர். இதன்போது, கிளிநொச்சி சென். திரேசா வித்தியாலய மாணவிகளின் நடன நிகழ்வுகளும், அம்பாறை மாவட்ட இசை கலைஞர்களின் ‘முகமூடி தயாரிப்பு’ எனும் தொனிப்பொருளிலான நாடகமும் இடம்பெற்றன. இதேவேளை, ஆனையிறவு இராணுவ முகாமிற்கு அருகாமையில் தற்போது மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்கு பொங்கல் உபகரணங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.ஈ எரிக் பெரேரா மற்றும் இராணுவ தளபதிகள் என பலர் கலந்துகொண்டனர்

திங்கள், 14 ஜனவரி, 2013

பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

உங்கள் அணை வர்க்கும் எமது உறவுகள் இணையங்கள் சார்பாவும் நவற்கிரி இணையங்களின் இனிய தை பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள் எமது உள்ளத்தை கவர்ந்த அன்பு இணைய வாசகர்களுக்கும் வேஸ்புக்மூலம் உள் இணைந்து எம் இணையத்தின் வளர்சிக்கு ஆதரவு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் உரித்தாகுக,,,,,நன்றி

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

பிரான்ஸ் நடத்திய தாக்குதல் தோல்வி: 17 பயங்கரவாதிகள்

பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த உளவாளியை மீட்பதற்காக சோமாலிய பயங்கரவாதிகளுடன் பிரெஞ்சு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் பலன் தரவில்லை. இந்த மோதலின்போது, 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பிணைக் கைதியை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பிரான்ஸ் தரப்பில் அதன் வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இந்த அதிரடி தாக்குதலை பிரான்ஸ் ராணுவத்தின் டிஜிஎஸ்இ ரகசிய பாதுகாப்பு சேவைப் பிரிவு மேற்கொண்டது. இது குறித்து, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜீன்-வெஸ் லீ டிரியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரான்ஸ் நாட்டின் உளவாளி டெனிஸ் அலெக்ஸ் கடந்த 2009ஆம் ஆண்டு சோமாலிய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார். மூன்றரை ஆண்டுகளாக அவரை மீட்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பயங்கரவாதிகள் மறுத்து விட்டனர். பயங்கரவாதிகளால் துன்புறுத்தப்பட்டு வரும் அலெக்ûஸ மீட்பதற்காக, டிஜிஎஸ்இ ரகசிய படையினர் வெள்ளிக்கிழமை இரவு அதிரடி தாக்குதல் நடத்தினர் என்றார். எனினும், பிணைக் கைதி அலெக்ஸ் உயிரிழந்ததாக வெளியான தகவலை மறுத்துள்ள ஷெபாப் பயங்கரவாத அமைப்பு, அடுத்த 2 நாள்களில் அலெக்ஸின் தலைவிதி பற்றி முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அரசு தனது ராணுவ வீரர்கள் மீது எந்த அளவுக்கு அக்கறையின்றி செயல்படுகிறது என்பது தங்களது வீரர்களை பலிகொடுத்ததிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது என்று ஷெபாப் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது

கடவுள் தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும்: நடிகர் அஜித்குமார்

ஆங்கிலேயரை விட இந்தியாவில் ஊழல் தலைவர்கள் இன்னும் அதிகமாகவே சுரண்டி உள்ளனர் என்று நடிகர் அஜித் கூறியுள்ளார். நடிகர், நடிகைகளுக்கு சேவை வரிவிதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் சமீபத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் நடிகர், நடிகைகள் இயக்குனர்கள், உள்ளிட்ட அனைத்து திரைப்பட சங்கத்தினரும் பங்கேற்றார்கள். ஆனால் அப்பொழுது விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் இருந்ததால் அஜித் பங்கேற்கவில்லை. இந்நிலையில் சேவை வரிவிதிப்பு குறித்து நடிகர் அஜித் அளித்துள்ள பேட்டியில், இரயில் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்குமோ எனத் தெரியாது. நான் திரை உலகினர் மீது சுமத்தப்பட்டுள்ள சேவை வரி பற்றி மட்டும் குறிப்பிடவில்லை. கட்டண உயர்வு, வரி விதிப்புக்குப் பதிலாக, நமது நாட்டிலுள்ள ஊழல் தலைவர்கள் மோசடி மூலம் சம்பாதித்த பணத்தை நம் நாட்டு அடிப்படைத் தேவைகள் வளர்ச்சிக்காக செலவு செய்ய முன்வந்தாலே போதும். நமது நாடு வளர்ந்த நாடுகளில் ஒன்றாகவோ, டாப்-10 பணக்கார நாடுகளில் ஒன்றாகவோ மாறும். ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆண்டு இங்கிருந்து மொத்த வளங்களையும் வாரிச் சுருட்டிக் கொண்டு சென்றனர். இந்த உண்மையை நாம் மக்களுக்கு புரிய வைத்தால் அவர்கள் மீண்டும் சிந்திப்பார்கள். ஆனால் ஆங்கிலேயரை விட நமது நாட்டில் உள்ள ஊழல் தலைவர்கள் இன்னும் அதிகமாகவே சுரண்டி உள்ளனர். கடவுள்தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும், என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானிடையே கடும் சண்டை:

எல்லையில் தொடர் பதற்றம் இந்தியா, பாகிஸ்தான் இராணுவ வீரர்களிடையே நேற்றிரவு கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சில ஊடுருவல்காரர்கள் இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து அவர்களைத் தடுக்கும் முயற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டனர். இந்திய வீரர்களை திசை திருப்புவதற்காக பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்புக்கும் இடையிலான மோதல் நீண்ட நேரம் நீடித்தது. இரவு 9.45 மணிக்கு தொடங்கிய துப்பாக்கிச் சண்டையால் இப்பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சண்டையில் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது காயமடைந்த வீரர்களின் எண்ணிக்கை ஏதும் உடனடியாகத் தெரியவில்லை. ஊடுருவல்காரர்களை நோக்கி இந்திய வீரர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கியவுடன் அவர்கள் எல்லைக் கோட்டுப் பகுதியிலிருந்து பாகிஸ்தானுக்குள் சென்றுவிட்டதாக கர்னல் பால்டா தெரிவித்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து மீறி வருகிறது. எல்லையில் இரண்டு வீரர்கள் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு இந்திய இராணுவம் கடும் அதிருப்தி தெரிவித்ததோடு, எல்லையில் படைகளைகுவித்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவும் இத்தகைய தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது{புகைப்படங்கள்,}

சனி, 12 ஜனவரி, 2013

மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறுடன் உயிர் வாழும் அதிசய பிரிட்டன் மனிதர்.

பிரிட்டனில் உள்ள ஒருவர், தன்னுடைய உடலில் 15 இடங்களில் உடைந்த எலும்புகளுக்காக 34 இடங்களில் அறுவை சிகிச்சை செய்ததோடு, மாரடைப்பு நோயையும் சந்தித்து, சிறுநீரக கோளாருடன் அதிசயமாக உயிர் வாழ்ந்து வருகிறார். அவரது உடலில் செயல்பாடுகளைக் கண்டு, மருத்துவர்களே அதிசயிக்கின்றனர். Terry White என்ற 67 வயது பிரிட்டன் மனிதர், தன்னுடைய இடுப்பில் ஆறு இடங்களில் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். உடலின் பல்வேறு இடங்களில் உடைந்துள்ள 15 எலும்புகளை ஒன்று சேர்ப்பதற்காக 34 முறை அறுவைசிகிச்சை செய்துள்ளார். இதுமட்டும் போதாது என்று அவருக்கு அடிக்கடி மாரடைப்பும் வருமாம். இதுவும் போதாதென்று சிறுநீரகமும் வேலை செய்யாமல் பழுதடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவருக்கு கொடுக்கப்பட்ட தொடர் சிகிச்சையால் அவர் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருவதைக் கண்டு, மருத்துவர்களே அதிசயிக்கின்றனர். இவருக்கு செய்யப்பட்ட 34 அறுவை சிகிச்சைகளில் 21 அறுவை சிகிச்சை மிகவும் கடினமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூன்று மேஜர் அறுவை சிகிச்சைகள் 10 நாட்கள் இடைவெளியில் மட்டுமே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் அனைத்து வெற்றி பெற்றதற்கு அவருடைய தன்னம்பிக்கையே பெரும் உதவியாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.