முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்குச் சார்பாகச் செயற்பட்ட நீதிதுறையைச் சார்ந்தோர் மற்றும் உயர்நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
இந்த இடமாற்றம் விரைவில் இடம்பெறவுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
இதன் முதற்கட்டமாக முன்னாள் பிரதம நீதியரசருக்கு நெருக்கமாக இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை உடனடியாக இடம்மாற்றம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நீதிச் சேவை ஆணைக்குழுவின் உயர்மட்ட அதிகாரிகள் தரத்தைச் சேர்ந்தவர்களும் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர்.
சிராணி பண்டாரநாயக்கா பிரதம நீதியரசாகவிருந்த இறுதிக் காலத்தில் அவரால் இடமாற்றம் செய்யப்பட்ட 21 நீதிபதிகளின் இடமாற்ற உத்தரவினை மொஹான் பீரிஸ் புதிய பிரதம நீதியரசாகப் பதவியேற்றவுடன் ரத்துச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
ஞாயிறு, 20 ஜனவரி, 2013
இணையத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி
இலங்கை பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் இணையத்தளத்தின் மீது 'கேம் ஓவர்' தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்தியை தகவல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ இல்லை.
இலங்கையின் பத்திரிகை ஒன்று அவருடன் இந்த விடயம் தொடர்பில் கேட்டபோது, இல்லை, அவ்வாறு இருந்தால் தாம் அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இணையத்தளம் கடந்த 17ம் திகதியில் இயங்கமாலுள்ளது.
எனினும் இலங்கை கணணி அவசர மாற்றுநடவடிக்கை குழு, தமக்கு இது ஊடுருவல் குறித்த முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என்று அறிவித்துள்ளது.
ஊடகங்களின் மூலமே தாம் இது தொடர்பான செய்தியை அறிந்துகொண்டதாக அந்தக்குழு குறிப்பிட்டுள்ளது
வெள்ளி, 18 ஜனவரி, 2013
தங்கச்சுரங்கத்தை கைப்பற்ற இரு பிரிவினரிடையே பயங்கர மோதல்.
சூடான் நாட்டில் தங்கச் சுரங்கத்தைக் கைப்பற்றுவது தொடர்பாக இரு பழங்குடியினப் பிரிவினரிடையே நடைபெற்ற மோதலில் 100 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஐ.நா. செய்தித் தொடர்பாளர் மார்டின் நெசிர்கி இது குறித்து செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: டார்பர் பகுதியில், ஜெபர் அமிர் எனுமிடத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெனி ஹுசைன் மற்றும் அபல்லா என்ற இரு பழங்குடியின மக்களுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது.
ஜனவரி 5 முதல் 9ஆம் தேதி வரை மோதல் உச்சகட்டத்தில் நடைபெற்றது. இதில், 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.
சில கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 70 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள், வசிப்பிடத்தை விட்டு வெளியேறி விட்டனர். கடந்த 10 ஆண்டுகளாகவே சூடானில் வன்முறை நிகழ்ந்து வருகிறது. பழங்குடியினரின் மோதல், வன்முறையை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
துப்பாக்கி ஏந்திய போராட்டக்காரர்கள், சாலைகளில் தடையை ஏற்படுத்தியுள்ளனர். ஐ.நா. பார்வையாளர்களை அப்பகுதிக்குள் அனுமதிக்கவில்லை.
இருப்பினும், கடந்த சில நாள்களாக வன்முறை கட்டுக்குள் இருக்கிறது. டார்பரில் செயல்படும் ஐ.நா- ஆப்பிரிக்க கூட்டமைப்பு உதவி மையம் சார்பில் 75 ஆயிரம் கிலோ எடையுள்ள நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உலக உணவுத் திட்டத்தின் வாகனங்கள் அப்பகுதிக்குச் செல்ல போதிய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. சூடான் வன்முறையால் 2003ஆம் ஆண்டில் இருந்து சுமார் 3 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர் என்றார் மார்டின் ந
வியாழன், 17 ஜனவரி, 2013
கடவுளை சாந்தப்படுத்துவதாக கூறி 100 அடி எரிகல் பள்ளத்தில்மீட்பு!
அரிசோனாவில் கடவுளை சாந்தப்படுத்துவதாக கூறி, எரி கல்லால் உருவான 100 அடி பள்ளத்தில் குதித்த இந்தியரை, 8 மணி நேர போராட்டத்துக்கு பின் போலீசார் மீட்டனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யூனியன் சிட்டியைச் சேர்ந்தவர் பர்மிர்ந்தர் சிங் (28). இவர் கடந்த 11ம் தேதி, திடீரென அரிசோனாவுக்கு கிளம்பிச் சென்றார்.
அங்கு எரி கல்லால் உருவான கருதப்படும் சுமார் 100 அடி ஆழ பள்ளம் ஒன்று உள்ளது. அன்று மாலை 4 மணி அளவில் பள்ளத்தின் மேற்பகுதியில் பர்மீந்தர் நின்று குதிக்க முயற்சி செய்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஊழியர் ஒருவர் பர்மீந்தரை அங்கிருந்து நகரும்படி எச்சரித்தார். ஆனால், அதைக் கேட்காமல் திடீரென அந்த பள்ளத்தில் பர்மீந்தர் குதித்தார். இதனையடுத்து அந்த ஊழியர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் மீட்பு படையினருடன் அங்கு விரைந்து வந்தனர்.
அப்போது பலத்த காற்றுடன் பனி கொட்டியது. எரிகல் பள்ளத்துக்குள் இறங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன. பேரிடர் மேலாண்மை, அவசரகால குழு உள்ளிட்ட 3 குழுக்களைச் சேர்ந்த 30 பேர் பர்மீந்தர் சிங்கை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு வழியாக அவர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் எரிகல் பள்ளத்தை ஒட்டிய பகுதிக்கு சென்றனர். அங்கிருந்து பல முறை குரல் கொடுத்தபோது, இரவு 8.22 மணி அளவில் பர்மீந்தர் சிங் உயிருடன் இருப்பது தெரியவந்தது.
உறை பனியுடன் கூடிய சுழல் காற்றில், மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள், பர்மீர்ந்தர் சிங் சுமார் 100 அடி ஆழத்தில் விழுந்துள்ளார் என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவர் சாப்பிடுவதற்காக உணவு, குடிநீர், சிறிய வாக்கிடாக்கி, குளிரை தாங்கிக் கொள்ளும் உடை, பிளாஷ் லைட் ஆகியவற்றை கயிற்றின் உதவியுடன் அவருக்கு அனுப்பினர். தொடர்ந்து 8 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அவர் வெளியே மீட்கப்பட்டார். ‘எதற்காக எரிகல் பள்ளத்தில் குதித்தீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, ‘கடவுளை சமாதானப்படுத்துவதற்காக எரிகல் பள்ளத்தில் குதித்தேன்' என்று பர்மீந்தர் சிங் கூறினார். இதைக் கேட்டு நொந்து போன மீட்பு படையினர், காயமுற்றிருந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பொலிகை பாடசாலைகாணவளர்ச்சியின் அழைப்பு
பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு சுற்றுச் சுவர் அமைப்பதற்கான நிதி உதவியை இந்த பாடசாலை நிர்வாகம் மற்றும் பாடசாலை பழைய மாணவர் சங்கம் புலம் பெயர்ந்து வாழும் பொலிகை மக்கள் மற்றும் பழைய மாணவர்களிடம் வேண்டுகோளாக விடுத்திருந்தது. இதற்கமைய சுவிஸ் நாட்டில் இருந்து இயங்கும் பொலிகை உறவுகள் ஒன்றியம் சுவிஸ் நாட்டில் வசித்து வரும் பொலிகை மக்களின் பங்களிப்புடன் பாடசாலைகாண இந்த திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.சுவிஸ் நாட்டில் வாழும் எம் உறவு களை இந்த பொலிகை உறவுகள் ஒன்றியத்தினருக்கு உங்களின் ஆதரவையும் பங்களிப்பையும் கொடுத்துவழப்பீரகவும் உங்களுடன் இணைந்து நவற்கிரிஇணையங்களும் ஆதரவை தெரி விக்கின்றோம் வாழ்க வளர்க..,.,. நன்றி ,.,.-
புதன், 16 ஜனவரி, 2013
வெலிஓயா புதுக்காடு பாடசாலை
அட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட வெலிஓயா புதுக்காடு இலக்கம் இரண்டு பாடசாலையில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் இந்தப்பாடசாலையில் கல்விகற்கின்ற மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அட்டன் - வட்டவளை பிரதான பாதையில் செனன் தோட்டத்துக்கு அருகிலிருந்து 4 கிலோ மீற்றர் தூரமுள்ள இந்தப் பாடசாலையில் தரம் ஐந்து வரை வகுப்புக்களை உள்ளதோடு 80 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
சீடா திட்டத்தின் மூலம் கட்டிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள போதும் உரிய பராமரிப்புக்கள் இடம் பெறாத காரணத்தினால் இந்தப்பாடசாலை நாளுக்கு நாள் பாழடைந்து வரும் நிலையை அடைந்துள்ளது.
வகுப்பறை கட்டிடங்களிலுள்ள கதவுகள், சாளரங்கள், தரை என்பன சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. ஆசிரியர் விடுதிகள் பாழடைந்துள்ளன. மலசலக்கூடங்களின் கதவுகள் அகற்றப்பட்டுள்ளன. குடிநீர் வசதிகள் இல்லை. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலேயே இந்தப்பாடசாலையின் மாணவர்கள் கல்விக் கற்று வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
மக்கள் பிரதிநிதிகள் இந்தப்பாடசாலையில் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு பல வாக்குறுதிகளை வழங்கி சென்ற போதும் இதுவரை எந்த உதவிகளும் கிடைக்கவில்லையென பெற்றோர் கூறுகின்றனர். இந்தப்பாடசாலையில் தற்போது கடமையாற்றும் அதிபர் வருகை தந்து குறுகிய காலமென்பதால் இந்தப்பாடசாலையைச் சிறந்த சுற்றாடல் உள்ள பாடசாலையாக மாற்றிக்காட்டப்போவதாக கருத்துத் தெரிவித்தார்.
இந்த நிலையில் தோட்டக்குடியிருப்புக்கு அருகிலுள்ள இந்தப்பாடசாலையை முன்னேற்றுவதற்கு பெற்றோரின் அக்கறையும் தேவையென சுட்டிக்காட்டப்படுகின்றது. இதே வேளை அட்டன் கல்வி வலய அதிகாரிகள் இந்தப்பாடசாலைக்கு விஜயம் செய்து உரிய பரிகாரங்களை மேற்கொள்வது இன்றியமையாததாகும்
செவ்வாய், 15 ஜனவரி, 2013
பாகிஸ்தான் பிரதமரை கைது செய்ய கோர்ட் உத்தரவு
பாகிஸ்தான் பிரதமர், ராஜா பர்வேஸ் அஷ்ரப்பை கைது செய்ய பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள
2010-ம் ஆண்டு அவர் நீர் ஆதாரம் மற்றும் எரிசக்தி துறையின் மந்திரியாக பதவி வகித்தார்
அப்போது தனியார் நிறுவனங்களுக்கு மின்சாரம் தயாரிக்க அனுமதி வழங்குவதற்கு 3.7 மில்லியன் டாலர்களை லஞ்சமாக வாங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் அரசு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்ப
லஞ்சம் வாங்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், ராஜா பர்வேஸ் அஷ்ரப், மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 15 பேரை கைது செய்யும்படி, தலைமை நீதிபதி இப்திகார் முஹம்மத் சவுத்ரி உத்தரவிட்டுள்ளார்
ஆக்ரோஷமாக பதிலடி கொடுங்கள்: இந்திய தளபதி
காஷ்மீரில், பாகிஸ்தானிய இராணுவம் துப்பாக்கியால் சுட்டால், ஆக்ரோஷமான பதிலடி தருமாறு இந்திய இராணுவத்தின் தலைவர் தனது தளபதிகளிடம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் தொடர்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு முறை யுத்தமிட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த வாரம் காஷ்மீர் பகுதியில் நடந்த மோதல்களில் இந்தியச் சிப்பாய்கள் இருவரும் பாகிஸ்தானியச் சிப்பாய்கள் இருவரும் கொல்லப்பட்டிருந்தனர்.
காஷ்மீரின் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் பதற்றங்களைத் தணிப்பதற்கும் பாகிஸ்தானிய இராணுவம் துப்பாக்கியால் சுட்டால், ஆக்ரோஷமான பதிலடி தருமாறும் இந்திய இராணுவத்தின் தலைவர் தனது தளபதிகளிடம் தெரிவித்துள்ளார்.
பெண்ணிடம் கத்தியை காட்டி பயமுறுத்தி பாலியல்!
தனிமையிலிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி பயமுறுத்தி அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முகமூடியணிந்திருந்த நபரை பதுளைப் பொலிஸார்; நேற்று கைது செய்துள்ளனர்.
பதுளைப் பகுதியைச் சேர்ந்த உடுவரை என்ற இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடுவரை என்ற இடத்தின் வீடொன்றில் ஏனையவர்கள் மரண வீடொன்றிலிருந்தமையினால் 58 வயது நிரம்பிய இரு பிள்ளைகளுக்கு தாயாரான மேற்படி பெண் மாத்திரமே வீட்டிலிருந்துள்ளார்.
அவ்வேளை உறவினர் போன்று குரல் கொடுத்து, அந்நபர் கதவைத் தட்டிய போது கதவைத் திறக்க, கத்தியை காட்டி பயமுறுத்தி அப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி தப்பிச் சென்றுள்ளார்.
காட்டப்பட்ட கத்தியை அப்பெண் பிடிக்க முயற்சித்த போது எதிர்பாராதவிதமாக அப்பெண் காயத்திற்குள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
குறித்தப் பெண் செய்த முறைப்பாட்டினையடுத்து உடுவரையைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




























