siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

இறப்பு தகவல். திருமதி சுப்பிரமணியம் பூபதி


       
       
 
               பிறந்த இடம்:சிறுப்பிட்டி                         வாழ்ந்த இடம்:யேர்மனி
                                                          
       தாயின் மடியில் ,15.06.1939                மண்ணின், மடியில் ,17.04.2013
தமிழீழம் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்மூண்ட்டில்  வதிவிடமாகவும் கொண்டிருந்த .சுப்பிரமணியம் பூபதி அவர்கள் 17.04.2013 புதன்கிழமை காலை 2.மணியளவில் காலமானார்.

இவர் காலம் சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்புமனைவியும் காலம்சென்ற அப்பாக்குட்டி.சோதிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும். பரமேஸ்வரியின் அன்புச்சகோதரியும். காலம்சென்ற கந்தசாமியின் மைத்துனியும் இராஜேஸ்வரி.குமாரசாமி .தேவராஜா ஜெயகுமார் தவராஜா.தவேஸ்வரியின் அன்பு தாயாரும். கந்தசாமி.காலம்சென்ற தர்மசீலன் .பேற்றா. சுதந்தினி.விஜயகுமாரி. பவானி. ஆகியோரின். மாமியாரும்..நித்யா.அரவிந்.மயூரன் . ஹிசான் .டிலக்ஷன். ஆகியோரின் அம்மம்மாவும்.சந்திரா.யானா. சன். சாமி. சுதேதிகா. தேவிதா. தேனுகா. தேவதி. சுதர்சினி.சுதர்சன். சுமிதா.மசேல்.றொபின். ஜுலியான் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்.காலம் சென்றவர்களான. சின்னையா. பாலசிங்கம். சோதிப்பிள்ளை. ஆகியோரின் சகலியும்

காலம் சென்றவர்களான. சின்னத்துரை.இராசம்மா. பொன்னம்மா. நல்லையா.ஆகியோரின் மைத்துனியும் ராணி. சின்னக்கிளி. சோதிப்பிள்ளை .சுப்பிரமணியம் . காலம் சென்ற செல்வநாயகம் வள்ளிப்பிள்ளை. பூரணம்.சின்னக்கிளி. நகுலேஸ்வரி. காலம் சென்றபரா. சரசு .கோடீஸ்வரன் .கிருஸ்ணகுமார்.சுமதி.சாந்தலிங்கம்.ஆகியோரின் மாமியாரும்.

மகேந்திரன். காலம் சென்றவசந்தி சாந்தகுமாரி.ஸ்ரீகண்ணதாசன். நவரத்தினம். இராசதுரை.ஆகியோரின் பெரியம்மாவும் ஆவர்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 22.04.2013 திங்கள்கிழமை காலை.11.மணிமுதல் மாலை 3மணிவரை பின்வரும் (Wischlinger Weg 66 44379 Dortmund ) முகவரியில் நடைபெறும் என்பதை அறியத்தருகிறோம்.

தகவல் பிள்ளைகள்`"  தொடர்புகளுக்கு:
. இராசேஸ்வரி-0231-379266-015211968487

 குமாரசாமி- 0304352235-015735631003

தேவராசா- 02315331577 (017649433890)

ஜெயகுமார் 0231-15064059-(015213677989)

தவராசா. 0231.9868697 (015256099405)

தவேஸ்வரி 02501-985835 ( 015739114878)  

 அன்னாரின்பிரிவால் துயர்  உறும்அனைவர்க்கும்எமது கண்ணீர்அஞ்சலி இந்த துயரத்தை உறவு இணையங்களும் அறியத்தருவதோடு அன்னாரின்ஆத்ம சாந்திக்காய் இறைவனைவேண்டுகிறது,
 

திருடர்களின் கைவரிசையால் காணாமல் போன,,,,

,,,,,

பிரிட்டனில் நியூ கேஸ்டில் நகரில் அமைந்துள்ள மேயர் இல்லத்தில் தொல்பொருட்கள் மற்றும் அரிய வகை பரிசுப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
இந்த இல்லத்தின் கதவுகளை உடைத்துக்கொண்டு நள்ளிரவில் நுழைந்த திருடர்கள், அங்கிருந்த சுமார் 1 1/2 லட்சம் பவுண்ட்கள் மதிப்புள்ள பொருட்களை அள்ளிச் சென்றுவிட்டனர்.
திருடப்பட்ட பொருட்களில் உலகின் மிக உயரிய பரிசு என கருதப்படும் நோபல் பரிசு ஒன்றாகும். ஆயுதப் போட்டியை உலகநாடுகள் கைவிட வேண்டும் என்று சேவையாற்றிய பிரிட்டன் நாட்டின் முன்னாள் வெளியுறவு மந்திரி ஆர்தர் ஹெண்டர்சனுக்கு 1934ம் ஆண்டு அமைதிக்கான இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அவர் நியூ கேஸ்டில் நகரைச் சேர்ந்தவர் என்பதால் அவரது மறைவிற்கு பிறகும் இந்த பரிசு பதக்கம் நகர மேயரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதையும் திருடர்கள் கொண்டு சென்றுவிட்டது உள்ளூர் மக்களுக்கு வேதனை அளிக்கும் செய்தியாக உள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெருமைக்குரிய நோபல் பதக்கத்தை எடுத்தவர்கள், உடனடியாக அதை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என நியூ கேஸ்டல் நகர்வாசி ஒருவர் கூறியுள்ளார்
 

வரி ஏய்ப்புக்கு உதவிய சுவிஸ் அதிகாரிகள்: வழக்கு?


சுவிஸ் வங்கியாளர் ஸ்டீபன் பக்கும்(Stefan Buck), சுவிஸ் சட்டதரனி எட்கார் பல்ட்சரும்(Edgar Paltzer) அரசுக்கு வரி செலுத்தாமல் ஏமாற்ற அமெரிக்கப் பணக்காரர்கள் பலருக்கும் சதி செய்து உதவி செய்துள்ளனர்.
இதனால் அமெரிக்காவின் சட்டத்துறை, இவர்கள் மீது சதி வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை நியுயார்க் நகரில் பதிவானது.
இது குறித்து அமெரிக்க சட்டதரனி அலுவலகம் தனது ஊடகக் குறிப்பில், பால்ட்சரும், பக்கும் தமது தொழில் திறமையால் அமெரிக்க வாடிக்கையாளர்களை வரி செலுத்த விடாமல் அரசை ஏமாற்றி சதி செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த வரி ஏய்ப்புக்காக சுவிட்சர்லாந்தில் மிகப்பெரிய வங்கியான UBS, அமெரிக்கச் சட்டத்துறைக்கு 780 மில்லியன் டொலர் அபராதம் செலுத்தியது.
இதேபோன்று சுவிட்சர்லாந்தின் மிகப்பழைய வங்கியான வெஜிலின்(Wegelin) நிறுவனம், வசதிபடைத்த அமெரிக்கர்களின் வரி ஏய்ப்புக்கு உதவியதற்காக 58 மில்லியன் டொலர் அபராதம் செலுத்தியது. ஆனால் பால்ட்சரும், பக்கும் இன்னும் கைது செய்யப்படவில்லை. 56 வயது பால்ட்சர் இரு நாட்டுக் குடியுரிமையும் பெற்றவர். 32 வயது பக் சுவிஸ் குடிமகன் ஆவர்.
இருவரும் தற்பொழுது சுவிட்சர்லாந்தில் தான் வசிக்கின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டு சிறைத்தண்டனை இவர்களுக்கு கிடைக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது
 

வியாழன், 18 ஏப்ரல், 2013

"செனட்" உறுப்பினருக்கு அனுப்பப்பட்ட விஷம் ??


அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த "செனட்" உறுப்பினர் ரோஜர் விக்கருக்கு மர்ம கடிதம் ஒன்று டென்னீசி மாகாணத்தில் உள்ள மெம் பிஸ் நகரில் இருந்த தபால் நிலையம் வழியாக அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால், அந்த கடிதத்தை அனுப்பியவரின் முகவரி எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும் அதில் செனட் உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த விக்கர் இது குறித்து உளவுத்துறையிடம் அவர் புகார் செய்தார்.
அதை தொடர்ந்து அந்த கடிதம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சோதனை நடத்திய போது அதில் "ரிசின்" என்ற கொடிய விஷம் தடவப்பட்டிருந்தது தெரியவந்தது.
கடிதத்தை பிரித்து படிக்கும் போதும் கையால் நாவில் எச்சில் படுத்தும் போதும் விஷம் உடலில் பரவி மரணத்தை ஏற்படுத்த இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
அந்த கடிதத்தை அனுப்பியது யாரென‌ தெரியவில்லை. இது குறித்து உளவுத்துறையும், பொலிசாரும் அதிரடி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். "செனட்" உறுப்பினர்களின் ஊழியர்களும் தீவிர விசாரணை உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், "செனட்" உறுப்பினர்களுக்கு வரும் மெயில் கடிதங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தபால் பொஸ்டனில் குண்டு வெடிப்பு நடந்த மறுநாள் "செனட்" உறுப்பினர் விக்கருக்கு கிடைத்தது.
அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கு பின்னர் "ஆந்த்ராக்ஸ்" விஷகிருமி பார்சல்கள் அனுப்பப்பட்டன. அதன் பின்னர் தற்போது விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது அமெரிக்க "செனட்" உறுப்பினர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

புதன், 17 ஏப்ரல், 2013

வங்கி ரகசியங்களை வெளியிடக்கூடாது: சுவிஸ்?


சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதி உவேலி மாரர்(Ueli Maurer) , சுவிஸ் வங்கிகள் தனது ரகசியக் காப்பு நடைமுறைகளை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வங்கி ரகசியம் என்பது மருத்துவ ரகசியம் போன்றது இதனை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும் என்றும் வலியுறுத்தினார்.
சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக இல்லை என்பதால் சுவிஸ் வங்கிகளில் பாதுகாக்கப்படும் ரகசியப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
ஏனெனில் அமெரிக்காவின் வெளிநாட்டு வங்கிக்கணக்கு வரி ஒத்துழைப்புச் சட்டத்திற்கு, மதிப்பளித்து சுவிஸ் அரசு நிறைய ஒத்துழைப்பு தந்துவிட்டது.
மேலும் வரி ஏய்ப்புப் பற்றிக் கேட்டதற்கு இதுபோன்ற தவறுகள் எல்லா துறைகளிலும் உண்டு. இதனைச் சரி செய்ய முயல வேண்டும் என்று பதிலளித்துள்ளார்
 

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

சீனா முதன்முதலாக வெள்ளை அறிக்கை வெளியிட்டது


உலகிலேயே மிக வலிமையான ராணுவத்தை பெற்றுள்ள ”சீன மக்கள் விடுதலை ராணுவம்” என்று அழைக்கப்படும் இந்த ராணுவத்தின் தரைப்படை, விமானப்படை, கப்பற்படை பற்றிய வெள்ளை அறிக்கை முதன் முதலாக வெளியிடப்பட்டது.
அதன்படி அங்கு 23 லட்சம் துருப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதைத்தவிர கட்டளைப்பிரிவு, அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை பிரிவுகளில் வேலை பார்ப்போர்களும் இருக்கிறார்கள். மேலும் சீனாவில் இந்த ஆண்டு ராணுவத்திற்காக 10,000 கோடி டொலருக்கு மேல் செலவிடப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
சீனாவிற்கு, கிழக்கு சீனக்கடல் பகுதியில் ஜப்பானுடன் தீவுப்பிரச்சினையும், தைவான் ராணுவத்துடன் தனி நாடு பிரச்சினையும் இருந்து வருகிறது. இயற்கை வளங்கள் நிறைந்த தென் சீனக்கடல் பகுதியில் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனாவிடையே பிரச்சினையும் இருந்து வருகிறது.
இந்நிலையில் சீனா வெளியிட்டுள்ள இந்த ராணுவ வெள்ளை அறிக்கை, ஒரு மிரட்டலின் அறிகுறியாக இருப்பதாக கூறப்படுகிறது
 

பாஸ்டன் மரதன் போட்டியில் தொடர் குண்டுவெடிப்பில் இருவர்?


அமெரிக்காவின் மான்செஸ்டர் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரில் இன்று சுமார் 27 ஆயிரம் பேர் பங்கேற்ற மராத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது. போட்டியில் பங்கேற்றவர்கள் இறுதிக் கோட்டை நெருங்கிய வேளையில் பீரங்கி முழங்கியது போன்ற சப்தத்துடன் குண்டு வெடித்தது.தொடர்ந்து 1/2 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து மேலும் 2 குண்டுகள் வெடித்தன. இதனால், மாரத்தானில் பங்கேற்றவர்கள் மூலைக்கு ஒருவராக சிதறி ஓடத் தொடங்கினார்கள். அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து வந்தன.
சம்பவ இடத்தை முற்றுகையிட்ட பொலீஸார், காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களில் 2 பேர் பலியானதாவும் சுமார் 30 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாஸ்டன் பொலீஸார் தெரிவித்தனர்.
இந்த குண்டுகளை ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயக்கி வெடிக்கச் செய்திருக்கலாம் எனவும், இது தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கக் கூடும் என்றும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைமையை தீவிரமாக கண்காணித்து வரும் ஒபாமா, காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து செய்யும்படி மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் வெடிக்காத 2 குண்டுகளை கைப்பற்றிய போலீசார் அவற்றை செயலிழக்கச் செய்தனர். இச்சம்பவத்தையடுத்து, நியூ யார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது

திங்கள், 15 ஏப்ரல், 2013

அழைப்பை நிராகரித்தது வடகொரியா: போர் மூளுமா?


பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென் கொரியா விடுத்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது.
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா கடந்த பிப்ரவரி மாதம் அணு ஆயுதச் சோதனையை நடத்தியது. இதைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.
எனினும், மீண்டும் ஏவுகணைச் சோதனைகளை நடத்த வடகொரியா தயாராகி வருவதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் கொரியாவையும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும்.
அமெரிக்காவையும் தாக்குவோம் என்று வடகொரியா அறிவித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதப் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பதற்றத்தைத் தணிப்பதற்காக பேச்சுவார்த்தைக்கு வருமாறு வடகொரியாவுக்கு தென் கொரியா கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தது. எனினும், இது தென் கொரியாவின் தந்திரம் என்று கூறி இந்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது.
தென் கொரியா தனது மோதல் போக்கைக் கைவிடும் வரை அதனுடன் பேச்சு நடத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று வடகொரிய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே வடகொரியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் அரசு, தலைநகர் டோக்கியோவைச் சுற்றிலும் பேட்ரியாட் ஏவுகணைகளை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

முதன்முறையாக தேர்தலில் போட்டியிடவுள்ள ?;



பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்றில் முதன்முறையாக பிந்தியா ராணா என்ற திருநங்கை போட்டியிடுகிறார்.
தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தது ஏன் என்பது தொடர்பாக பிந்தியா ராணா நிருபர்களிடம் கூறியதாவது:- பாகிஸ்தான் அரசியலைப் பற்றி நான் எப்போதுமே கவலைப்பட்டதில்லை.
கடந்த 2004ம் ஆண்டு என்னைப் போன்ற ஒரு திருநங்கை இறந்துவிட்டார். அவரது பிரேதத்தை சொந்த ஊரான பஞ்சாப் மாகாணத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தோம். நானும் உடன் சென்றேன்.
ஆனால், விமானம் மூலம் பிரேதத்தை கொண்டு செல்வதற்குள் பல அவமானங்களை சந்திக்க நேர்ந்தது. என்னையும் இறந்துப்போன என் தோழியையும் அதிகாரிகள் கேவலமாக பேசி கேலி செய்தார்கள்.
அவள் எப்படி செத்தாள் அவள் சாகும் அளவிற்கு நீ என்ன செய்தாய் என்று ஆபாசமாக கிண்டல் செய்தனர். எங்களைப் போன்ற திருநங்கைகள் எவ்வளவு கேவலமாக நடத்தப்படுகிறார்கள் என்று எண்ணி அன்று மிகவும் வேதனைப்பட்டேன்.
அதிகாரவர்க்கம், தொழில்முறை அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் ஆகியோரின் முகத்திரையை கிழிப்பதற்கான வாய்ப்பாக இந்த தேர்தல் அமைந்துள்ளது.
திருநங்கைகளின் அவலங்களை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அரசிடம் எடுத்துக்கூறி உரிய தீர்வு காணவே தேர்தலில் போட்டியிடுகிறேன் என மேலும் அவர் கூறினார்.
 

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

தகராறு : துப்பாக்கிச் சூட்டில் முடிவடைந்தது !


திஸ்ஸமகாராம - கங்கசிரிபுர பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையில் இடம்பெற்ற சண்டையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று (13) இரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.புத்தாண்டை வரவேற்று போடப்பட்ட பட்டாசு ஒன்று அருகில் உள்ள வீட்டில் விழுந்துள்ளது. இதனை அடுத்து பட்டாசு போட்ட நபரின் குடும்பத்திற்கும் பட்டாசு விழுந்த வீட்டு குடும்பத்திற்கும் இடையில் சண்டை மூண்டுள்ளது.
இச்சண்டை விரிவடைந்து அங்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன், மகள் ஆகியோர் படுகாயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகள் மேலதிக சிகிச்சைகளுக்கென கராபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு நடாத்திய கணவன் மற்றும் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திஸ்ஸமகாராம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.