siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 4 டிசம்பர், 2013

தற்கொலையை இணையத்தில் பரப்பிய வாலிபர்! கண்டு ரசித்த மக்கள்

கனடாவில் வாலிபர் ஒருவர் தனது தற்கொலை காட்சியை இணையதளத்தில் ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

வட அமெரிக்காவில் உள்ள கனடாவை சேர்ந்தவர் ஸ்டீபன் (20). கல்லூரி மாணவரான இவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார்.
மேலும் அதனை ஒரு இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்ப போவதாகவும் அறிவித்துள்ளார்.
அதன்படி தொடக்கத்தில் சில மாத்திரைகளை விழுங்கி தண்ணீர் குடித்தார். பின்னர் ஓட்கா மதுவை குடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனது அறையில் தீ வைத்து கொண்டு அங்கேயே அமர்ந்துவிட்டார்.
அக்காட்சியை குரூர புத்தி கொண்ட 200 பேர் நேரில் பார்த்து ரசித்தனர். மேலும் அவர் தற்கொலை முயற்சியை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில் மனிதாபிமானம் உள்ள சிலர் பொலிசிற்கு தகவல் அளித்ததின் பேரில் அவர் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.
 

அமெரிக்காவில் இந்திய தம்பதி கைது

அமெரிக்காவில் உள்ள கென்துஸ்கி பகுதியில் இந்தியாவை சேர்ந்த அம்ரூத்லால் பட்டேல், அவருடைய மனைவி தாக்ஷாபென் ஆகியோர் 2 குழந்தைகளுடன் வசிக்கிறார்கள். இந்த தம்பதியர் அங்கு சாலையோர 4 'பாஸ்ட்புட்' உணவகங்களை நடத்தி வருகிறார்கள்.

 அதில் பணியாற்ற இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை அனுமதியின்றி அழைத்துச் சென்றதுடன் குறைந்த சம்பளமும் வழங்கியதாக கூறப்படுகிறது

செவ்வாய், 3 டிசம்பர், 2013

அமெரிக்காவில் நோயை பரப்பிய மருத்துவருக்கு 39 வருட சிறை

 அமெரிக்காவில் ஊசி மூலம் மஞ்சள் காமாலை நோயை பரப்பிய மருத்துவருக்கு 39 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூஹம்ப்ஷியர் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் கியாட் கோவ்ஸ்கி (34). இருதய மருத்துவரான இவர், 3 மாகாணங்களில் 18 மருத்துவமனைகளில் மாறி மாறி பணி புரிந்தார்.
இந்த நிலையில் கடந்த 2011–ம் ஆண்டில் ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்த போது அவரை பொலிஸார் கைது செய்தனர். 46 பேருக்கு மஞ்சள் காமாலை நோயை பரப்பியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் தடை செய்யப்பட்ட மருந்துகளை பலருக்கு செலுத்தியதும், பல மருந்துகளை திருடியதும் தெரியவந்தது.

இவர் வலி நிவாரண மருந்துகளை திருடி அதனுடன் ஆல்கஹாலை கலந்து கெட்டுபோன ஊசி மூலம் நோயாளிகளின் உடலில் செலுத்தினார். அதனால் பலர் மஞ்சள் காமாலை, கல்லீரல் உள்ளிட்ட நோயினால் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட மருத்துவர் மீது நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு 39 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
 

ஜனாதிபதி போர்க்குற்றவாளி: நவநீதம்பிள்ளை குற்றச்சாட்டு

சிரிய ஜனாதிபதி பஸார் அல் அசாத் உட்பட்ட உயரதிகாரிகளுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளுக்காக சாட்சியங்களையும் முன்வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

சிரியாவின் ஜனாதிபதி அஸாத் மீது ஐக்கிய நாடுகள் நேரடியாக போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை இதுவே முதல்தடவையாகும்.

ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டின்படி சிரிய உள்நாட்டு போரில் ஓரு லட்சம் பேர் பலியாகியுள்ளனர்
 

திங்கள், 2 டிசம்பர், 2013

அமெரிக்கர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ஒபாமா


கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய ஒருமாத காலத்தை நன்றி தெரிவிக்கும் நாளாக  கடைபிடிப்பது அமெரிக்கர்களின் வழக்கம்.
இந்த ஒரு மாதத்தில் தங்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எதிர்பாராத பரிசுகளை தந்து அசத்துவது இந்த நன்றி தெரிவிக்கும் நாளின் சிறப்பம்சமாகும்.

4 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா கடுமையான பொருளாதார சரிவை சந்தித்தபோது நன்றி அறிவிப்புக்காக அன்பளிப்புகளை வாங்குபவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சிறிய கடைகளில் மட்டுமே வாங்கி உள்ளூர் வணிகர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என அமெரிக்காவின் பிரபல வங்கி துணையமைப்பான அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கிரெடிட் கார்ட் நிறுவனம் அறிவித்தது.

அதை தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக அன்பளிப்பு வாங்கும் அமெரிக்கர்கள் தாங்கள் வசிக்கும் உள்ளூரில் இருக்கும் சிறிய கடைகளையே தேர்வு செய்கின்றனர்.
இந்நிலையில், வடமேற்கு வாஷிங்டனில் உள்ள ஒரு புத்தக கடையின் வாசலில் நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதியின் கார் வந்து நின்றது.

முன்னறிவிப்பு ஏதுமின்றி ஒபாமாவின் கார் அவ்வழியாக வருவதை கவனித்து பொலிஸார் போக்குவரத்தை கட்டுப்படுத்த சிரமப்பட்டனர்.

மகள்கள் சாஷா மற்றும் மலியாவுடன் புத்தக கடைக்குள் சென்ற ஒபாமா சுமார் ஒரு மணி நேரம் கடையை சுற்றிப்பார்த்து 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை அன்பு மகள்களுக்கு வாங்கி தந்தார்.
பாதுகாவலர்கள் கெடுபிடியின்றி சாதாரண உடையில் ஒபாமா புத்தகங்களை தேர்வு செய்த காட்சியை ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன்களில் பதிவு செய்தனர்.
 

சீனாவுக்கு தகவல் பரிமாற்றிய கனேடியர் கைது

சீனாவுக்கு தகவல்களை பரிமாற்றம் செய்ததாக கூறப்படும் ஒருவரை கனேடிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

கனேடிய பிரஜையான இவர், குய்ன் குவான் ஹவாங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கனடாவின் போர்க் கப்பல்கள் திட்டம் தொடர்பில் இவர் சீனாவுக்கு தகவல்களை பரிமாறிக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த கனேடிய பிரஜை, கப்பல் வடிவமைப்பு துறையில் பணியாற்றுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் கனேடியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


 

 

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

வேலைவாய்ப்புகளை அள்ளிக்கொடுக்கும் பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் வாழும் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் தாராளமான முறையில் கிடைக்கின்றன.
 வேலை செய்ய பிரான்ஸ் ஒரு அற்பதமான நாடு என்பதை விளக்கும் பத்து காரணங்கள்
· தற்காலிகமாக வேலைவாய்ப்புகளை அளித்து பின் அதை நிரந்தரபணியாக்கும் வழி செயல்படுகிறது.
· 2010 முதல் 2013 வரை பல வித வேலைவாய்ப்புகள் வந்துள்ளன.இதனால் பிரான்ஸ் மக்கள் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவரும் பயனடைகின்றனர்.

· பாரிஸ் நகரில் பல வேலைவாய்ப்பு மையங்கள் திறக்கப்பட்டு ,வேலைவாய்ப்பு இணையதளங்கள் மற்றும் ஊடகங்கள் வேலைவாய்பை அளிக்கின்றது.

· பிரான்ஸின் நிறுவனங்கள், மாத வருமானத்துடன் பல வித சலுகைகளையும் அளிக்கிறது.
· வேலை பார்க்குமிடத்தில் மிகவும் மலிவான விலையில் பலவித உணவுகளை வழங்கப்படுகின்றன.
· தற்காலிக வேலையிலிருந்து ஒப்பந்தக்காலம் முடிந்து வேறு பணியில் அமரும் வரை அவர்களுக்கு வேலையின்மை உதவித்தொகை வழங்கப்படுகிறது.

· தங்களிடம் வேலைபார்க்கும் தொழிலாளிகளுக்கு மெட்ரோ ரயில் இலவச பயணச்சீட்டை ஒவ்வொரு நிறுவனமும் அளிக்கின்றன.

· சுயவேலைவாய்ப்பிற்காக தொடங்கப்படும் சிறுதொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.

· தனியார் துறைகளால் ஓய்வுகாலநிதி மற்றும் ஆயுள்காப்பீடு கொடுக்கப்படுகிறது.
· ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு பிரான்ஸின் பண்நாட்டு நிறுவனங்களில் பல வேலைவாய்ப்பு உள்ளது
 

சர்ச்சைக்குரிய பகுதிக்கு போர் விமானங்களை அனுப்பியது சீனா

கிழக்கு சீனக் கடல் பகுதியில் சர்ச்சைக்குரிய சென்காகு தீவுகளை உள்ளடக்கி புதிய வான் பாதுகாப்பு மண்டலம் அறிவித்த சீனா, அங்கு முதல் முறையாக போர் விமானங்களை அனுப்பி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது.

கிழக்கு சீனக் கடல் பகுதியில் ஜப்பான் கட்டுப்பாட்டில் உள்ள சென்காகு தீவுகளை டியாவோயு தீவுகள் என்று அழைக்கும் சீனா, அவை தனக்கு சொந்தம் என்று கூறி வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகள் இடையே முறுகல் நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில் சீனா கடந்த சனிக்கிழமை தனது வான் எல்லையை விரிவாக்கும் வகையில், சர்ச்சைக்குரிய தீவுகளை உள்ளடக்கி புதிய வான் பாதுகாப்பு மண்டலம் அறிவித்தது.

இப்பகுதி வழியே பறக்கும் விமானங்கள் அதன் பயணத் திட்டத்தை முன்கூட்டியே சீன அரசிடம் அளிக்க வேண்டும். இல்லாவிடில் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் என எச்சரித்தது. சீனாவின் இந்த எச்சரிக்கையை ஜப்பானும் அதன் நட்பு நாடுகளும் நிராகரித்தன.

மேலும் சீனாவின் எச்சரிக்கையை நிராகரிக்கும் வகையில், அந்நாடு அறிவித்த புதிய வான் மண்டலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க போர் விமானங்கள் பறந்து சென்றன.

இதைத் தொடர்ந்து ஜப்பான், தென் கொரிய விமானங்களும் அப்பகுதியில் பறந்து சென்றன. இந்த விமானங்களை தாங்கள் கண்காணித்ததாக சீனா கூறியது.
இந்நிலையில் புதிய வான் மண்டலம் அறிவித்த பிறகு முதல் முறையாக அப்பகுதியில் சீனப் போர் விமானங்கள் நேற்று முன்தினம் பறந்து சென்றன.

இதுகுறித்து சீன விமானப் படை செய்தித் தொடர்பாளர் நேற்று கூறுகையில்,
“அனைத்து நாடுகளும் தங்கள் வான் பகுதியில் வழக்கமாக மேற்கொள்ளும் கண்காணிப்பு பணியை போல, கிழக்கு சீனக் கடல் பகுதியில் சீனாவின் புதிய வான் பாதுகாப்பு மண்டலத்தில் ஜெட் போர் விமானங்கள் வியாழக்கிழமை பறந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டன” என்றார்.
“சீனாவின் வான் பகுதியை பாதுகாக்கவும், அச்சுறுத்தல்களை உறுதியுடன் எதிர்கொள்ளவும் எந்நேரமும் விழிப்புடன் இருப்போம்” என்று சீன விமானப் படை வியாழக்கிழமை கூறியது. அதே நாளில் போர் விமானங்கள் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

இதனிடையே கிழக்கு சீனக் கடல் பகுதியில் புதிய வான் மண்டல அறிவிப்பை நாங்கள் வாபஸ் பெற வேண்டுமானால், ஜப்பானும் இதே போன்ற அறிவிப்பை வாபஸ் பெறவேண்டும் என்று சீனா அறிவித்துள்ளது.

சீனா தனது அறிவிப்பை வாபஸ் பெறவேண்டும் என்று ஜப்பான் பிரதமர் ஷென்ஜோ அபே கூறியிருந்தார்.

இதுகுறித்து சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் யாங் யுஜுன் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறுகையில், “சீனா தனது அறிவிப்பை வாபஸ் பெறவேண்டுமானால், முதலில் ஜப்பான் இதே போன்ற அறிவிப்பை வாபஸ் பெறட்டும். பிறகு அவர்கள் கோரிக்கை குறித்து 44 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் பரிசீலிக்கிறோம்” என்றார்.
 

கனடாவில் நடைபெற்ற ஜி8, ஜி20 மாநாடுகளை உளவு பார்த்த அமெரிக்கா!

கனடாவில் நடைபெற்ற ஜி8 மற்றும் 20 மாநாடுகளை அமெரிக்கா முழுமையாக உளவு பார்த்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கனடாவின் டொரான்டோ நகரில் 2010ம் ஆண்டு யூன் 26, 27 ஆகிய திகதிகளில் ஜி-20 மாநாடு நடைபெற்றது.

இதில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் ஊழியர் ஸ்னோடென்னை மேற்கோள் காட்டி கனடா பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் என்ற ஊடகம் மற்றுமொரு தகவலை வெளியிட்டுள்ளது.

அதில் கனடாவில் நடைபெற்ற மாநாட்டின் தொலைபேசி உரையாடல்களை அமெரிக்கா ஒட்டுக் கேட்டுள்ளது என்றும் இதற்கு கனடா அரசின் உளவு அமைப்பான கனடா தொலைத்தொடர்பு பாதுகாப்பு நிறுவனமும் முழுஒத்துழைப்பு அளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

இதேபோல் கனடாவின் ஹன்ட்வில்லே நகரில் 2010ம் ஆண்டு யூன் 25, 26 ஆகிய திகதிகளில் ஜி-8 மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன்,

அமெரிக்கா, கனடா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டையும் அமெரிக்கா அமைப்பு உளவு பார்த்துள்ளது என்று கூறியுள்ளது.
 

சனி, 30 நவம்பர், 2013

பிரான்சில் உயிரை விட்ட பிரித்தானிய தம்பதி

பிரான்சில் இரண்டு லாரிகளுக்கிடையே நசுக்கப்பட்டு 54 வயதுடைய பிரித்தானிய தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வட பிரான்ஸில் இன்று 11.30 மணியளவில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்து நடந்தபோது இரண்டு லாரிகள் சடுதியாக நிறுத்தப்பட்டபோது எதிரே வந்த தம்பதியினர் பயணம் செய்த கார் நசுக்கப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே பிரித்த்தானிய தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். மேலும் வாகன ஓட்டுனர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இரண்டு ஓட்டுனர்களும் எங்களது பாதுகாப்பில் உள்ளனர் என்றும் அவர்களுக்கு மது பரிசோதனைகள் நடத்தப்பட்டன. எனினும் அவர்கள் மது அருந்தவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.