siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 28 ஜூலை, 2012

வாந்தி கோளறகவலை வேண்டாம் கை வைத்தியம்இருக்கின்றது

மசக்கையா கவலையை விடுங்க இஞ்சி சாறும், எலுமிச்சை சாறும் இருக்கு!


மாத விலக்கு தள்ளிப் போனவுடன் சிலருக்கு மசக்கை, வாந்தி ஏற்படும். காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சம்பழம்தை பிழிந்து அதில் ஒரு சொட்டு இஞ்சிச்சாறு சேர்த்துக் குடிக்க வேண்டும்.

காய்ச்சின பசும்பால் 100 மில்லி எடுத்து, சூடு இல்லாமல் ஆற வைத்துக் கொள்ளவும். அதில் ஒரு கோழி முட்டையின் வெள்ளைக்கரு, அரை புட்டி சோடா நீரை கலந்து சாப்பிட, வாந்தி எடுப்பது குணமடையும்.

கர்ப்பமான பெண்களுக்கு அடிக்கடி வாந்தி வரும். எதைச் சாப்பிட்டாலும் வாந்தி எடுப்பார்கள். 3 ஏலக்காய்களைத் தீயில் சுட்டுப் பொடியாக்கி, தேனில் குழைத்துக் கொடுத்தால், வாந்தி உடனே மட்டுப்படும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் கால் லிட்டர்; பார்லியைப் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, சிறிது உப்பு சேர்த்து, அரை எலுமிச்சம்பழத்தையும் அதில் பிழிந்து, தினமும் அவ்வப்பொழுது சில நாட்கள் குடித்து வர, மசக்கையால் உண்டாகும் தொந்தரவு மறைந்தே போகும்.

சீரகத்தைப் பொடி செய்து வாயில் போட்டு மெல்லலாம். (சீரகத் தண்ணீர் பருகலாம் அதாவது -ஒரு ஸ்பூன் சீரகத்தை ஒரு அவுன்ஸ் வெந்நீரில் போட்டு, சாறு தண்ணீரில் இறங்கியவுடன் அப்படியே தண்ணீர் குடிக்கும் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொண்டு, அதையே
குடித்து வரலாம். மலையாளிகள் இப்படி சீரக வெள்ளம் சாப்பிடுவதாலேயே அவர்கள் பிள்ளைகள் நல்ல நிறமாகப் பிறக்கின்றன.)

சாப்பிட பிடிக்காவிட்டால், வறுத்த சீரகப்பொடியுடன் துளி உப்பு சேர்த்து, காய்ச்சிய நெய்யுடன் சாப்பிட்டால் ருசியாக இருக்கும். எளிதில் ஜீரணமாகும். கண்டிப்பாக மாங்காய், சாம்பல், விபூதி விக்ஸ் இவைகளைச் சாப்பிடக்கூடாது. பிறக்கப்போகும் குழந்தைக்கு ரத்தம் ஊறாமல் ரத்த சோகை ஏற்படும்.

மிகவும் குளிர்ச்சி உடம்புள்ளவர்கள் எலுமிச்சை சேர்க்கக்கூடாது. தண்ணீர் குடிக்கும்போது சீரகத்தை போட்டுக் கொதிக்க வைத்துதான் குடிக்கவேண்டும். 40 நாட்கள் ஆனதுமே, வெதுவெதுப்பான நீரில்ல் தான் குளிக்க வேண்டும்.

குளிர்ந்த அல்லது மிகச் சூடான நீர் குழந்தையைத் தாக்கும். 40 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை அலைச்சல்; பிரயாணம் கூடாது. கருச்சிதைவு ஏற்படும் காரம் குறைக்க வேண்டும். மிளகாய்க்கு பதில் மிளகு சேர்க்கலாம்.

ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க சில வழிகளை பின்பற்றிதான் ஆகனும். பின்பற்றினால் அழகான ஆரோக்கியமான குழந்தை உங்கள் மடியில்

0 comments:

கருத்துரையிடுக