siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 4 ஆகஸ்ட், 2012

சீக்கிய கோயிலில் செருப்பு துடைத்த விவகாரம்: பாகிஸ்தான் சட்டத்தரனி பதவி நீக்கம்

சீக்கிய கோயிலில் செருப்பு துடைத்த விவகாரம்: பாகிஸ்தான் சட்டத்தரனி பதவி நீக்கம்
 சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012,
இந்தியாவில் உள்ள புனித ஸ்தலமான பொற்கோவில் குருத்வாராவில் காலணிகளை சுத்தம் செய்ததற்காக பாகிஸ்தான் அரசு உதவி தலைமை சட்டத்தரனி குர்ஷித் கானை பதவியிலிருந்து அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது. சமீபத்தில் இந்தியாவிற்கு விஜயமளித்த சட்டத்தரனி குர்ஷித் கான், பஞ்சாப்பில் உள்ள பொற்கோவிலுக்கு சென்றார்.
அங்குள்ள குருத்வாராவில் சீக்கியர்களின் காலணிகளை சுத்தம் செய்தார். இதற்கு பாகிஸ்தான் அரச பிரதிநிதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு குர்ஷித் கான், அஜ்மல் கசாப் போன்று இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த வில்லை. ஒரு சேவையாகத்தான் பொற்கோவிலில் உள்ள காலணிகளை சுத்தம் செய்தேன் என்றார்.
இந்நிலையில் அவரது பதவியை பாகிஸ்தான் அரசு பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது நேபாள தலைநகர் காட்மண்டுவில் உள்ள அவர், தனது பயணத்தை இரத்து செய்து விட்டு பாகிஸ்தான் திரும்ப உள்ளார். அதே சமயம், குர்ஷித் நீக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்க பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது.

0 comments:

கருத்துரையிடுக