siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 4 ஆகஸ்ட், 2012

லஞ்சம் வாங்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை

லஞ்சம் வாங்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை
 சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012,
லஞ்சம் பெற்றுக்கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பளத்திற்கு மேலதிமாக சொத்துக்களை குவித்து திடீர் செல்வந்தர்களாக மாறியுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றி தகவல் வழங்குமாறு லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
உபபொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் ஏனைய பதவிகளை வகிக்கும் சில உத்தியோகத்தர்கள் இவ்வாறு திடீர் செல்வந்தர்களாக மாறியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
காணி, பேரூந்து, வர்த்தக நிலையங்கள், பல்வேறு வாகனங்கள், திரை அரங்குகள் போன்ற பல்வேறு சொத்துக்களை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொள்வனவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில உத்தியோகத்தர்கள் நெருங்கிய உறவினர்களின் பெயர்களில் சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளனர்.
சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கு எவ்வாறு வருமானம் ஈட்டப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது

0 comments:

கருத்துரையிடுக