siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 13 செப்டம்பர், 2012

எம்.ஜி.ஆர். பேட்டிகள்

 

By.Rajah.பல பத்திரிகைகளுக்கு மக்கள் திலகம் அளித்த பேட்டிகள்,ரசிகர்களூக்கு அவர் அளித்த பதில்கள் ஆகியவற்றின் அரிய தொகுப்பு, ‘’எம்.ஜி.ஆர். பேட்டிகள்’’ .
வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் இயங்கி வரும் எஸ்.கிருபாகரன் என்பவர் இந்நூலை தொகுத்துள்ளார்.
இந்நூலில், திமுக தலைவர்களால் திரைப்பட உலகம் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது?என்ற கேள்விக்கு, ’’திரைப்பட உலகம் என்பது திரைப்படத் தொழிலை அடிப்படையாக கொண்ட ஒரு அமைப்பைப் பற்றிய ஒரு வார்த்தை என்று நான் நினைக்கிறேன். வேறு ஒரு கேள்விக்கு நான் பதில் சொன்னதுபோல திரைப்படத்தொழில் ஒரு சில பகுதிகளை மட்டும் கொண்ட தொழில் அல்ல. திரைப்பட உலகம் என்று நீங்கள் கேட்பது தமிழ்திரைப்பட உலகம் பற்றித்தான் என்று நான்சேர்த்துக்கொள்ளலாம் அல்லவா?
அப்படி உங்கள் அனுமதி கிடைக்குமானால் தமிழ்த் திரைப்படத்தொழிலில் தூய தமிழுக்கு வித்திட்டது திமுக தலைவர்கள்தான் என்று நான் அறுதியிட்டுக்கூற முடியும்’’ என்று பதிலளித்துள்ளார்எம்.ஜி.ஆர்.
மேலும், நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா? தமிழ்ப் படங்களின் தரம், முன்னேற்றம் இவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?விமர்சனம் எப்படி இருக்க வேண்டும்?வயதுக்கு பொருந்தாத காட்சிகளில் நீங்கள் நடிப்பதாக எழும் விமர்சனம் குறித்து? என்பன உட்பட திரைப்படத்துறை பற்றி பல்வேறு கேள்விகளூக்கு பதிலளித்துள்ளார்.
பல்வேறு துறை பற்றியும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர் அளித்துள்ள பேட்டிகள் தொகுக்கப்பட்டுள்ளன.
அதிமுக கட்சி துவங்கிய பின், திமுக அமைச்சரவை மீதான புகாரை ஜனாதிபதியிடம் அளித்த பின்(1972), டெல்லியில் அளித்த பேட்டியில், ’’தமிழ்நாட்டில் உங்களுக்கு எவ்வளவு ஆதரவு? என்ற கேள்விக்கு, 1,000க்கு 999 பேர் என் பக்கம். ஒருவர் திமுக பக்கம் என்று அழுத்தமாக பதில் அளித்துள்ளார் எம்.ஜி.ஆர்.
ஓவர் ஆக்டிங் என்றால் என்ன? என்கிற கேள்விக்கு, எம்.ஜி.ஆர். அளித்துள்ள பதில், நடிகர் திலகத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் சொல்லப்பட்டிருக்கிறது என எண்ணத்தோன்றுகிறது