siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 23 அக்டோபர், 2012

ஈழத்து மக்களையும் மீனவர்களையும் சின்மயி அவமானபடுத்தினாரா???


Wednesday.24.October 2012.By.Rajah.டுவிட்டரில் தன்னைப்பற்றி அவதூறாக எழுதுபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கவேண்டுமென கடந்த தினங்களுக்கு முன்பு பாடகி சின்மயி புகார் கொடுத்திருந்தார்.
சின்மயி புகாரின் பேரில் சென்னை மாநகர காவல்துறையின் கணனி குற்றப் பிரிவினர் சரவணகுமார் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெண்களைத் தொந்தரவு செய்வது தொடர்பான சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழும் சின்மயிக்கு மிரட்டல் விடுத்ததாக இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழும் வழக்குக்கள் பதிவாயிருக்கின்றன.
இந்நிலையில் நிஃப்ட் எனப்படும் சென்னை நாகரிக ஆடைகளுக்கான கல்லூரிப் பேராசிரியர் சரவணகுமார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சின்மயி செய்தது என்ன?
சினிமா பின்னணி பாடகி சின்மயி டுவிட்டரில் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இவர்கள் அவதூறாக எழுதியுள்ளனர்.
நாங்கள் மீன்களை துன்புறுத்துவதில்லை, வெட்டி கொல்வதுமில்லை என முத்து உதிர்த்திருக்கிறார் சின்மயி.
இது மீன் உண்பவர்களை மட்டுமல்ல, மீன் பிடித்தலையே தொழிலாகக் கொண்டுள்ள மீனவர்களையும் அவமதிப்பதாகும் என இப்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அதுமட்டுமின்றி மீன்களை மீனவர்கள் கொல்கிறார்கள், மீனவர்களை இலங்கை கடற்படை கொல்கிறது, இரண்டும் ஒன்றுதான், இதில் இலங்கையை கண்டிப்பதற்கு என்ன இருக்கிறது? என்றும் சின்மயி கூறியிருந்தாராம்.
ஈழத்து மக்களை, மீனவர்களை அவமானப்படுத்தியதோடு, மீனை உணவாகத் தந்து வறியோரின் பசிபோக்கிய இயேசு பிரானைய குற்றம் சாட்டுவதாகத்தான் சின்மயி கருத்து உள்ளதாக இணையத்தில் சின்மயிக்கு எதிரானோர் அணி திரள ஆரம்பித்துள்ளனர்.
இவ்வளவு நாளாக அடக்கி வாசிக்கப்பட்ட இந்த ஜாதியினர் எப்பொழுது எந்த தைரியத்தில் பேசுகிறார்கள் என்பதும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதற்கிடையே இணையதளங்கள் வாயிலாக பாலியல் தொந்திரவு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு ஒருவர் கைதாவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.