siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 5 நவம்பர், 2012

இராஜதந்திரிகளை பீரிஸ் சந்திப்பு – கூட்டமைப்புடன் ஏட்டிக்குப் போட்டி?

 06.11.2012.By.Rajah.பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கடந்த வெள்ளிக்கிழமை புதுடெல்லியைத் தளமாக கொண்டு செயற்படும் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார். புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவரின் அழைப்பின் பேரில், புதுடெல்லியை மையமாக கொண்டு செயற்படும் 76 நாடுகளின் தூதுவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது, போருக்குப் பிந்திய சிறிலங்காவின் நிலைமைகள் குறித்த அவர் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய 90 நாடுகளில் பெரும்பாலானவை, சிறிலங்காவின் நிலைப்பாட்டை ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் புதுடெல்லி சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு, புதுடெல்லியை மையமாக கொண்ட செயற்படும் வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்திருந்தது.

இந்தநிலையிலேயே, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரும் இந்தச் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்

0 comments:

கருத்துரையிடுக