siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 20 டிசம்பர், 2012

பூமியை போன்று 5 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

 
பூமியை போன்று 5 புதிய கோள்கள் இருப்பதாகவும், அவற்றில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலை இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, சிலி மற்றும் அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கடந்த 14 ஆண்டுகளாக டாவ் செட்டி என்ற நட்சத்திரம் மற்றும் அதன் அருகில் உள்ள கோள்கள் பற்றி ஆய்வு செய்தனர்.
இதில் டாவ் செட்டி என்ற நட்சத்திரத்தை 5 கோள்கள் சுற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கோள்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்பு விசையால் இணைக்கப்பட்டுள்ளதும், இதில் மிகச் சிறிய கோளானது பூமியை விட 2 மடங்கு பெரியதும் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கோள்கள் மிக தொலைவில் இருக்கின்றன என்றும், ஒளியின் வேகத்தில் சென்றால் 12 ஆண்டுகளில் இந்த கோள்களை சென்றடைய முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.{புகைப்படங்கள்,}



0 comments:

கருத்துரையிடுக