siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 28 டிசம்பர், 2012

சுரங்கத் தொழிலில் முதலீடு அதிகரிக்கிறது:

சுவிஸ் சுரங்கத்தொழில் ஜாம்பவானான எக்ஸ்ட்ராட்டா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பாப்புவா நியு கினியாவில் ஃபிரீடா ஆற்றங்கரையில் உள்ள தங்கம் மற்றும் செம்புச் சுரங்கத்தை மேம்படுத்த முன்பு கணக்கிட்டதை விட 300 மில்லியன் டொலர் கூடுதலாகத் தேவைப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. சுவிஸ் நிறுவனம், பாப்புவா நியு கினியாவில் உள்ள ஹைலாண்டஸ் பசிஃபிக் என்ற நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து அந்தத் தீவில் சுரங்கத்தொழிலை மேற்கொண்டுள்ளது. முன்பு 5.3 மில்லியன் டொலர் முதலீடு செய்தால் போதும் என்ற திட்டமிட்டது.
இப்போது 5.6 மில்லியனாக உயர்ந்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் புனல் மின்சார முறையை விடுத்து எரிவாயு மின்சார முறையைப் பின்பற்ற வேண்டும் என்று இந்நிறுவனம் முடிவெடுத்ததே ஆகும். 82 சதவீதம் பங்குகளுக்குச் சொந்தமான எக்ஸ்ட்ராட்டா நிறுவனம் திட்ட ஆய்வு அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டது.
முதலீடு அதிகரிப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம், கழிவு மேலாண்மைக்கான செலவினங்களில் ஏற்பட்ட மாற்றம் ஆகும்; என்று Xstrata திட்ட மேலாளர் பால்கோ குறிப்பிட்டுள்ளார்.
ஹைலாண்ட்ஸ் பசிஃபிக் நிறுவனம் தனியாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், அமெரிக்கச் செலாவணியின் மதிப்பு குறைந்ததால் முதலீடு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்த சுரங்கம் மட்டுமின்றி உலகில் உள்ள மற்ற சுரங்கங்களிலும் செலவுகள் அதிகரித்து இருப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
போன ஜுன் மாதம், தன்னுடைய பங்குகளை விற்கப் போவதாக எக்ஸ்ட்ராட்டா குறிப்பால் உணர்த்தியது. முதலீட்டுச் செலவுகளின் உயர்வினை உத்தேசித்தே பங்கு விற்பனை குறித்து இந்நிறுவனம் சிந்தித்திருக்கலாம்.
ஃபிரீடா ஆற்றங்கரையில் உள்ள சுரங்கங்களில் 204,000 டன் செம்பும் 305,000 அவுன்ஸ் தங்கமும் கடந்த இருபது ஆண்டுகளில் கிடைத்துள்ளது. எக்ஸ்ட்ராட்டா இந்தச் சுரங்கத்தை 2007 முதல் எடுத்து நடத்தி வருகிறது.
ஹைலாண்டஸ் பசிபிக் தனது அறிக்கையில், அடுத்த ஆண்டில் தானும் எக்ஸ்ட்ராட்டாவும் பாப்புவா நியு கினியாவின் அரசுடன் சமபங்கு கேட்டு பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக தெரிவித்துள்ளது

0 comments:

கருத்துரையிடுக