siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 3 ஜனவரி, 2013

திடீர் தீவிபத்து. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்



கனடாவில் Central York பகுதியில் புதிதாக கட்டிக்கொண்டிருந்த ஒரு வீட்டில் மின்கசிவு காரணமாக ஜனவரி 2அம் தேதி அதிகாலையில் திடீரென தீப்பிடித்ததால், அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தீயை மிகுந்த சிரமத்துடன் அணைத்தனர். வீட்டினுள் கட்டிடவேலைகளுக்கு உதவும் கேஸ் சிலிண்டர்கள் இருந்ததால், முதலில் அவற்றை பாதுகாப்புடன் வெளியேற்றிய தீயணைப்பு துறையினர் தீ, அருகிலுள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுக்க முதல்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Central York தீயணைப்பு துறையின் உயரதிகாரி Ian Laing செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி ஒன்றில், தீயை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்களும், 50 வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் வீடு முற்றிலும் தீயால் சேதமடைந்துவிட்டது என்று கூறினார்

0 comments:

கருத்துரையிடுக