siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 4 ஜனவரி, 2013

முதன்முறையாக ஆண்மை நீக்க தண்டனை. தென்கொரிய

 தென் கொரியாவில், செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்ட வாலிபருக்கு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில், செக்ஸ் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் நடைமுறை உள்ளது. ஆசிய நாடுகளில் இந்த தண்டனை கிடையாது.

டில்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு, இந்த முறையில் தண்டனை அளிக்க பரிந்துரை செய்யப்படுகிறது. ஆனால், பல்வேறு அரசியல் கட்சியினர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, தென் கொரியாவில், பியோ, 31, என்பவர், சிறுமிகள் பலரை கற்பழித்ததற்காக, கைது செய்யப்பட்டார்.
"டீன் ஏஜ்' பெண்களை நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி, அவர்களை கற்பழித்து வந்த பியோ, "எனக்கு, செக்ஸ் உணர்வை கட்டுப்படுத்த முடியவில்லை' என, கோர்ட்டில் தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த சியோல் கோர்ட், "பியோவுக்கு, 15 ஆண்டு, சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
சிறையிலிருந்து வெளியேறுவதற்கு, இரண்டு மாதங்களுக்கு முன், ரசாயன முறையில், அவருக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும்; அது மட்டுமல்லாது, அவருடைய நடமாட்டத்தை, 20 ஆண்டுகளுக்கு கண்காணிக்கும் வகையில், எலெக்ட்ரானிக் கருவியை அவரது உடலில் வைக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது. தென் கொரியாவில் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பின் மூலம், ஆசிய நாட்டை சேர்ந்த, முதல் நபருக்கு ரசாயன முறையில், ஆண்மை நீக்கம் செய்யப்படுகிறது, என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

கருத்துரையிடுக