siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 4 ஜனவரி, 2013

டெல்லி மாணவி மரணம்: மைனர் தப்பிக்க வாய்ப்பு

டெல்லி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஒருவர் 18 வயதுக்குட்பட்டவர் என்பதால் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
குறித்த இளைஞர் இன்னமும் ஐந்து மாதங்களில் 18 வயதை அடைந்துவிடுவார்.
எனினும் அவர் 18 வயதை அடைய முன்னரே குற்றம் செய்திருப்பதால் அதிக பட்சமாக மூன்று வருட தண்டனையே கொடுக்க முடியும். அதுவும் சிறுவர் சீர் திருத்த பள்ளியிலேயே அனுமதிக்க முடியும்.
18 வயதை கடந்த இளைஞர்களுக்கு மட்டுமே சிறைத்தண்டனை கொடுப்பதற்கு தற்போதைய இந்திய சட்டம் வழிவகை செய்கிறது.
மேலும் அவர் சில மாதங்களில் விடுவிக்கப்பட கூடிய அபாயம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இளைஞர் தான் கல்வி பயின்று வந்த பள்ளிக்கு சமர்ப்பித்திருந்த பிறப்புச் சான்றிதழை வைத்தே அவர் இன்னமும் மேஜர் ஆகவில்லை என டெல்லி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதனாலேயே தற்போது எலும்பாக்க சோதனை மூலம் குறித்த இளைஞரின் உண்மையான வயதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் விசாரணைக்குழு இறங்கியுள்ளது.
எனினும் அப்பெண்ணை மானபங்கப்படுத்தியதில் ஆறு குற்றவாளிகளுக்கும் சம பங்கிருப்பதாகவும், அப்பெண்ணின் மரணத்திற்கும், அவர் அனுபவித்த கொடூரத்திற்கும் ஆறு பேருமே முக்கிய காரணமானவர்கள் எனவும் குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது.
மேலும் குறிப்பாக அந்த 17 வயது இளைஞரே, அம்மாணவியிடம் கேலியாக பேசி வன்முறையை தூண்டியதாகவும், அப்பெண் மற்றவர்களால் மானபங்கப்படுத்தபட்டு மயங்கி வீழந்த பின்னர் கடைசியாக அவரை வண்புணர்ச்சி செய்ததாகவும் குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது.
இதேவேளை இவ்விவகாரம் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் வழக்கு விசாரணையில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அவ்வப்போது பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஒரு பேச்சாளரை நியமிக்க வேண்டும் என நீதிமன்றத்திற்கு சட்டத்தரனிகள் சிலர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக