siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 3 மே, 2013

சூடான் தங்கச்சுரங்க விபத்தில் 60 பேர்


ஆப்பிரிக்க நாடான சூடானின் எண்ணெய் வளம் மிக்க பகுதியான தெற்கு சூடான் சமீபத்தில் பிரிந்து சென்றது. இதையடுத்து அந்நாட்டின் எண்ணெய் வருமானத்தின் 75 சதவிகித இழப்பு ஏற்பட்டது.
தர்பர் பகுதியில் இருக்கும் தங்கச் சுரங்கங்கள்தான் அந்த நாட்டின் முக்கிய வருமானமாக மாறியிருக்கிறது. இந்த ஆண்டில் 50 டன் தங்கம் வெட்டியெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த திங்களன்று வடக்கு தர்பாரில் உள்ள ஜாபெல் அமிர் சுரங்கத்தில் 40 மீட்டர் ஆழத்தில் தங்கம் வெட்டி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த சுரங்கம் சரிந்து விழுந்தது. இதில் 60-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் சுவர்கள் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் மீட்புப்பணிகள் முடங்கியுள்ளன.
இதனால் நவீன கருவிகளை பயன்படுத்தாமல், பழங்காலக் கருவிகளைக் கொண்டு மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தர்பர் தங்கச் சுரங்கங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நடைபெறும் மோதலில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஊரைவிட்டு வெளியேறி, அகதிகள் முகாமில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

0 comments:

கருத்துரையிடுக