siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 4 மே, 2013

பேரழிவை ஏற்படுத்த சகோதரர்கள் திட்டமிட்டது அம்பலம் ,,

 
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய சகோதரர்கள், சுதந்திர தினத்தன்றும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தயத்தின்போது 2 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய தமர்லான் சர்னேவ்(வயது 29) என்பவர் தப்பி ஓட முயன்றபோது ஏப்ரல் 18ஆம் திகதி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதே நாளில் ஜோகார் சர்னேவ்(வயது 19) என்பவரை பொலிஸார் கைது செய்தனர். இவ்விருவரும் செசன்யாவைச் சேர்ந்த சகோதரர்கள் என விசாரணையில் தெரிய வந்தது.
ஜோகாரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4ஆம் திகதி வெடிகுண்டு தாக்குதல் நடத்துவது என முதலில் தீர்மானித்திருந்தது தெரியவந்துள்ளது.
எனினும் எதிர்பார்த்த காலத்துக்கு முன்னதாகவே வெடிகுண்டு தயாராகி விட்டதால் முன்கூட்டியே தாக்குதலை நடத்தியதாக ஜோகார் கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் நடைபெறும் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்று பாஸ்டன் நகரிலும் நடைபெறுவது வழக்கம். ஆனால், எந்த நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டனர் என்ற தகவல் தெரியவில்லை.
குக்கர் மூலம் வெடிக்கச் செய்த அந்த வெடிகுண்டை தமது குடியிருப்பில் வைத்தே தனது சகோதரர் தமர்லான் தயாரித்ததாக ஜோகார் கூறியுள்ளார். பின்னர் தாக்குதல் நடத்துவதற்கான இடத்தை அடையாளம் காண்பதற்காக பாஸ்டன் நகரம் முழுவதும் நோட்டம் விட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஜோகார் மீது பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது
 

0 comments:

கருத்துரையிடுக