siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 6 மே, 2013

இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன இராணுவம் வெளியேற்றம்


 இவர்கள் சுமார் 19 கி.மீட்டர் தூரம் வரை இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். அப்பகுதியை ஆக்கீரமித்த சுமார் 50 சீன ராணுவ வீரர்கள் அங்கேயே முகாம்களை அமைத்து தங்கியுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதிக்குள் கடந்த (ஏப்ரல்) மாதம் 15-ம் தேதி அத்துமீறி ஊடுருவிய சீன ராணுவத்தினர் வெளியேறினர்.
இந்திய எல்லையை விட்டு வெளியேறுமாறு இந்தியா - சீனா ராணுவ உயரதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்ற 3 கொடி கூட்டங்களும் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில், 4-வது முறையாக நேற்றும் இரு நாடுகளின் உயரதிகாரிகளுக்கு இடையில் கொடி கூட்டம் நடைபெற்றது.
சுமார் 45 நிமிடம் நடைபெற்ற இந்த கூட்டத்தின் போதும், சீனா தனது நிலைப்பாட்டில் பிடிவாதம் காட்டியுள்ளது.
‘லடாக்கில் உள்ள தவுலத் பேக் ஓல்டி எல்லைப் பகுதியில், சீன எல்லைக்குள் சுமார் 300 மீட்டர் தூரம் ஆக்கிரமித்துள்ள பகுதியில் இருந்து முதலில் இந்தியா வெளியேற வேண்டும்.
அதன் பிறகே, இப்போது ஆக்கிரமித்த பகுதியை விட்டு நாங்கள் வெளியேறுவது தொடர்பாக யோசிக்க முடியும்’ என சீனா கூறியது.
இதனையடுத்து, ஏற்பட்ட சமரச உடன்படிக்கையின்படி, லடாக்கில் உள்ள தவுலத் பேக் ஓல்டி எல்லைப் பகுதியில் இருந்து இந்தியாவும், கடந்த 15-ம் தேதி ஆக்கிரமித்த இந்திய பகுதியிலிருந்து சீனாவும் இன்றிரவு 7.30 மணியளவில் வெளியேறின
 

0 comments:

கருத்துரையிடுக