siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 1 மார்ச், 2020

நுரையீரலை ஆய்வு செய்த அமெரிக்க மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

சீனப் பிரஜை ஒருவரின் நுரையீரலில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள மவுண்ட் சினாய் உடல் பரிசோதனை வைத்தியர்கள் குறித்த சீன பிரஜையை ஸ்கான் செய்தவேளை அவருக்கு கொரோனா 
தாக்கம் ஏற்படாத நிலையில் அறிக்கைகள் வெளியாகின.ஆனால், அவரை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்தியர்கள் அவதானித்த நிலையில் அவரின் நுரையீரலில் சில மாற்றங்கள் தெரிந்தன
.அதிக தொற்று நோயால் பாதிக்கப்பட்ட அவரின் நுரையீரலை ஸ்கான் மூலம் ஆராய்ச்சி செய்தபோது அதில் வைரஸ் பரவி வருவதை காணக்ககூடியதாக இருப்பதை வைத்தியர்கள் அவதானித்த
 நிலையில் அதனை 
புகைப்படங்கள் மூலம் வெளியிட்டுள்ளனர்.வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை இருவாரங்கள் சோதனை செய்தபோதே 
இவ்வாறு அவரின் நுரையீரலில் வைரஸ் வளர்ந்திருப்பதை அவதானிக்க
 முடிந்தது.அதேவேளை இவ்வாறான அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் கொரோனா நோயாளி ஒருவரை தனிமைப்படுத்தி அவருக்கான சிகிச்சைகள் உரிய முறையில் வழங்கலாம் என அ
வர் தெரிவித்துள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 comments:

கருத்துரையிடுக