siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

குறைந்த விலையில் இனி எச்.ஜ.வி நோயிலிருந்து விடுதலை பெறலாம்

16.08,2012.எச்.ஜ.வி(HIV) நோய் குறித்து பேசல்(Basel) பல்கழைக்கழகம் தற்போது ஆய்வு ஒன்றை நிகழ்த்தியுள்ளது. இந்த ஆய்வில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு சேர்க்கைகள் அடங்கிய மருந்துக்களை நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்துவதால், நோய்கள் சமநிலையில் குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளன.
எச்.ஜ.வி வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள், நோயிலிருந்து 90சதவீதம் குணமடைந்திருப்பதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
எச்.ஜ.வி நோயினால் பாதிக்கப்பட்ட 2005 முதல் 2009 ஆண்டு வரை உள்ள 16000 நோயாளிகள் இந்த ஆய்விற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் மது அருந்தியவர்கள், போதைக்கு அடிமையானவர்கள், கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் என எச்.ஜ.வி நோயுடன் சேர்த்து மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதிலிருந்து நீக்கப்பட்டனர். முற்றிலும் எச்.ஜ.வி வைரசினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் என 1957 பேர் மட்டும் ஆய்விற்கு பயன்படுத்தப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு முதலில் ரெட்ரோ வைரஸ்(antiretroviral therapy) சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை சுவிஸ்சட்லாந்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பல்கழைக்கழகங்களான பேசல், பெர்ன், ஜெனிவா, லாசென், லுகான்னோ, செட் கெலென் மற்றும் சூரிக்ச் (Basel, Bern, Geneva, Lausanne, Lugano, St Gallen and Zurich) ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவில் நோயிலிருந்து 90 சதவீதம், அனைத்து நோயாளிகளும் குணமடைந்திருப்பதாக சர்வதேச மருத்துவ காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆய்வின் தலைவர் பேட்டிகே (Manuel Battegay) கூறுகையில், முந்தைய ஆய்வுகளை விட தற்போதைய ஆய்வு நல்ல பலனை தந்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அதிக விலை கொடுத்து வாங்கும் மருந்துக்களின் அதே பலனை இந்த பல்வேறு சேர்க்கைகள் அடங்கிய மருந்துக்கள் குறைந்த விலையில் தருகின்றன.
இதனால் அனைத்து வகுப்பினராலும் மருந்துகளை வாங்கவும் நோயிலிருந்து குணமடையவும் இந்த ஆய்வு உதவுகிறது என தெரிவித்துள்ளார்