siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

மனித அவலம் ஒன்று இந்தோனேசிய கரையில் நிகழும் அபாயம்

07.09.2012.BY.Rajah.
எரிபொருள் தீர்ந்த நிலையில் மேற்கு இந்தோனேசியாவில் தரித்து நிற்கும் கப்பலில் இருந்து வெளியேற 53 ஈழத்தமிழர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் உண்ணாவிரதமிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்டகளாக நடந்து கொண்டுள்ள இச் சம்பவம் சாதாரண சம்பவமாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் ஊடகங்களில் பார்வையில் எட்டாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ள மனித அவலமாகவே இச் சம்பவம் உள்ளது.

இது தொடர்பில் எமக்குக் கிடைக்கப் பெற்ற தகவல்கள்,

கடந்த 9ம் நாள் தமிழ்நாட்டு கிழக்கு கடல் மகாபலிபுரத்திற்கும் காசிமேட்டுக்கும் இடையில் உள்ள ஒரு பகுதியில் உள்ள துறைமுகம் ஒன்றில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி ஈழப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 53 பேருடன் புறப்பட்ட படகு ஒன்று எரிபொருள் தீர்ந்த நிலையில் இந்தோனேசியாவில் கரையொதுங்கியுள்ளது.

அப் படகை தற்போது இந்தோனேசியக் கடற்படை சுற்றி வளைத்துள்ளதுடன் அவர்களை கரையிறக்கி சிறிலங்கா அரசிடம் கையளிக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஆனால் படகில் இருந்து இறங்க மறுத்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தாம் சிறிலங்காவிடம் திருப்பி கையளிக்கப்பட்டால் கொல்லப்பட்டு விடுவோம் எனக் கூறித் தம்மை ஐ.நா நிறுவனங்கள் அல்லது மனித உரிமை நிறுவனங்களிடம் கையளிக்கும் படி
கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளதுடன் உணவுத் தவிர்ப்பையும் மேற்கொண்டு வருகின்றனர்.

53 பயணிகளை கொண்ட இப் படகில் இரு ஊனமுற்றவர்கள் மற்றும் மூன்று குழந்தைகள் நான்கு பெண்கள் இருப்பதாக அறிய முடிகின்றது.

கடந்த 19ம் திகதி எரிபொருள் தீர்ந்த நிலையில் தத்தளித்த படகை சில மீனவர்கள் கண்டு 100 லீற்றர் டீசல் வழங்கி நகர உதவியதாக தெரிவிக்கும் அப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீண்டும் 28ம் திகதி வரை பயணம் மேற்கொண்ட நிலையில். எரிபொருள் தீர்ந்து காற்றில் அடித்து செல்லப்பட்டு இந்தோனேசியாவில் சிக்காப் எனப்படும் பிரதேசத்தில் உள்ள துறைமுகத்தில்
தரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆபத்தான கடல் பயணத்தை தொடர்ந்து கடந்த நான்கு நாட்கள் உணவுத் தவிர்ப்பை மேற்கொண்டு வரும் இவர்கள் உடல் நிலை மிகவும் மோசமடைந்து கொண்டுள்ளதாகவும் இன்னும் ஒரு இரு நாட்கள் தாமதிப்பின் மனித அவலம் ஒன்று இந்தோனேசிய கரையில் நிகழும் எனவும் அவ் படகில் உள்ள ஈழப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே நேரம் பிறிதொரு படகில் பயணித்த இன்னொரு தொகுதி புகலிடக்கோரிக்கைiயாளர்கள் படகில் இருந்து இறக்கப்பட்டடு ஒரு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிலும் பெண்கள் குழந்தைகள் அடங்கிய ஈழத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளதாகவும் அறிய முடிகின்றது.