siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

சீருடை, பாதணி வழங்காவிடின் விரைவில் பணிநிறுத்தப் போர்; யாழ். பல்கலை கல்விசாரா ஊழியர் எச்சரிக்கை

07.09.2012.by.rajah.யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் தமக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய சீருடை, பாதணி என்பனவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மேலதிக நேரக் கொடுப்பனவை விரைவாக வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இவற்றை உடன் நிறைவேற்றத் தவறின் தாம் போராட்டத்தில் குதிக்கப் போவதாக ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.
இது தொடர்பான எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்கள் யாழ்.பல்கலைக்கழக விளம்பரப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளன.
இது தொடர்பில் தங்கராஜா தெரிவித்ததாவது:
ஒவ்வொரு வருடத்துக்கு மான சீருடை, பாதணி என்பன வருட ஆரம்பமான ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். தற்போது எட்டு மாதங்களாகிவிட்ட போதும் அவை வழங்கப்படவில்லை.
இராமநாதன் கட்டடத் தொகுதியில் மின்சாரமின்மை மலசல கூடமின்மை, வாகனத் தரிப்பிடப் பற்றாக்குறை மற்றும் சிற்×ண்டிச் சாலைகளில் தாமதம் எனப் பல பிரச் சினைகள் தொடர்கின்றன. இவை சீர்செய்யப்படவில்லை.
25,30,35,40 ஆகிய வருடங்களை நிறைவு செய்தவர்களுக்கு நான்கு கட்டடங்களில் நான்கு வகையான பதக்கங்கள் வழங்க வேண்டும். அவை இதுவரை எவருக்கும் வழங்கப்படவில்லை. மேலதிக நேரக் கொடுப்பனவு நிலுவை இதுவரை வழங்கப் படவில்லை. அவற்றை உடன் வழங்க வேண்டும்.
நிதிக் கிளை அதிகாரி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு சம்பள முற்பணம் வழங்கப்பட்டதிலிருந்து தெரியவருகிறது. இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாழ். பல்கலைக் கழகத்தில் இந்த வருடம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பணிபுரிந்த பணியாளர்களின் கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை. அதனை உடனே வழங்க வேண்டும்.
ஊழியர் சம்பளக் கணிப்பீட்டிலுள்ள தவறுகள் திருத்தப்படாமலேயே சம்பளக் கணிப்பீடு இடம் பெறுகிறது. அதனை உடனே திருத்த வேண்டும்.வாகனச் சாரதிகளுக்கான வாகனங்கள், கடமை கள் வழங்குவதில் பாகுபாடு காட்டப்படக்கூடாது. பேருந்து உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும்.
இவற்றை விரைவில் தீர்த்து வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவேண்டி வரும் என்றார். இது தொடர்பாக யாழ். பல்கலைக்கழகப் பதிவாளர் காண்டீபனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.