siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 3 ஜூலை, 2013

நாடுகளை உளவு பார்த்ததற்கு மன்னிப்பு கேட்க முடியாது:


மற்ற நாட்டு தூதரகங்களை உளவு பார்த்த விடயத்தில் யாரிடமும் மன்னிப்பு கேட்க தேவையில்லை என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் பாட்ரிக் வென்ட்ரல் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் பெரும்பாலான நாடுகளுடன் மிகவும் நெருக்கமான நட்புறவுடன் உள்ளோம்.
அவர்களுடனான இந்த தூதரக ரீதியிலான உறவு மேலும் தொடரும். எனவே அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் உள்பட 38 நாடுகளின் தூதரகங்களை உளவு பார்த்த விஷயத்தில் யாரிடம் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை.
இது அனைத்து நாடுகளும் மேற்கொள்ளும் வழக்கமான ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஐரோப்பிய நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்க தொடரும். இதுதொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் ஒருவாரத்தில் தொடங்க உள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாட்டு மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பயனடைவார்கள். இதுவே மற்ற நாடுகளுடன் எங்களின் ஒளிவுமறைவற்ற செயல்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சான்று என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே இது தொடர்பாக ஜனாதிபதி ஒபாமா கூறுகையில், ஒரு நாடு மற்ற நாடுகளை உளவு பார்ப்பது என்பது வழக்கமான ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளார்
 

0 comments:

கருத்துரையிடுக