siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 3 ஜூலை, 2013

பிராஸ்னனின் செல்ல மகள் மரணம்


ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்து புகழ் பெற்ற பியர்ஸ் பிராஸ்னனின் மகள் சார்லட் பிராஸ்னன் புற்றுநோயால் மரணமடைந்துள்ளார்.
60 வயதாகும் பியர்ஸ் பிராஸ்னனுக்கு இரு மகன்கள் மட்டுமே, மகள் சார்லட்டை சிறு வயதிலேயே தத்தெடுத்து வளர்த்தார்.
இவரது தாயார் காஸென்ட்ரா தனது கணவரைப் பிரிந்து குழந்தையுடன் தனியாக நின்ற போது காஸென்ட்ராவை மணந்து கொண்டு சார்லெட்டை தத்தெடுத்துக் கொண்டார்.
மகள் மீது நிறையப் பிரியம் வைத்திருந்தார் பிராஸ்னன்.
சார்லெட்டுக்கு கருப்பை புற்றுநோய் இருந்தது சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தனக்கு புற்றுநோய் வந்திருப்பது தெரிந்தும் கூட மனம் தளராத சார்லெட், மிகவும் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் சிகிச்சையை தொடர்ந்து வந்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சார்லெட்டின் நிலைமை மோசமானது.
இதையடுத்து அவர் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டார். கடந்த மாதம் 28ம் திகதி மரணமடைந்தார்.
இத்தகவலை பிராஸ்னன் ஒரு சிறு அறிக்கை மூலம் உலகுக்கு அறிவித்தார்.
அதில், ஜூன் 28ம் திகதி எனது அன்பு மகள் சார்லெட் எமிலி, இறைவனடி சேர்ந்தார். கருப்பை புற்றுநோயால் அவர் மரணமடைந்தார்.
அவர் மரணித்தபோது கணவர் அலெக்ஸ், குழந்தைகள் இசபெல்லா, லூகாஸ், சகோதரர்கள் கிறிஸ்டோபர், சீன் ஆகியோர் உடன் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தான் நடித்து வரும் நவம்பர் மேன் இன் செர்பியா என்ற படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட பிராஸ்னன், அதில் வரும் ஒரு சண்டைக் காட்சியில் வழக்கம்போல நடித்துக் கொடுத்தாராம்.
சார்லெட்டின் தாயார் காஸன்ட்ராவும் இதே போலத்தான் புற்று நோய்க்கு தனது 42வது வயதில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது

 

0 comments:

கருத்துரையிடுக