| 23.09.2012.By.Rajah.கனடாவின் டொரண்டோ மாகாணத்தில்
15 வயது மாணவனுடன் தவறான உறவு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 42 வயது ஆசிரியை
குற்றமற்றவர் என கூறி டொரண்டோ நீதிமன்றம் விடுதலை செய்தது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் 42 வயதான Mary Gowans என்ற ஆசிரியை தன்னிடம்
தகாத முறையில் நடந்து கொண்டதாக 15 வயது மாணவன் கொடுத்த புகாரினால், அந்த ஆசிரியை
மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது ஆசிரியை Mary Gowans தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். அவர் கூறுகையில், அந்த சிறுவன் தான் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டான் என்றும், தனக்கு அதிகளவான காதல் குறுஞ்செய்திகளை அனுப்பினான் என்றும் தெரிவித்தார். இதற்கு தான் உடன்படாததால் தன் மீது பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளான் என்றும் தெரிவித்தார். மேலும் தனக்கு குறுஞ்செய்திகள் அனுப்பியதை அந்த ஆசிரியை நிரூபித்ததால், ஆசிரியர் குற்றமற்றவர் என கூறி விடுதலை செய்வதாக டொரண்டோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
ஞாயிறு, 23 செப்டம்பர், 2012
மாணவனுடன் பாலியல் உறவு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை விடுதலை
ஞாயிறு, செப்டம்பர் 23, 2012
செய்திகள்
மிகவும் சவால் நிறைந்த கட்டிடத்தில் ஏறி பிரான்ஸ் ஸ்பைடர்மேன் புதிய சாதனை
ஞாயிறு, செப்டம்பர் 23, 2012
செய்திகள் காணொளி
| ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2012[ காணொளி, புகைப்படங்கள்] |
| By.Rajah.சீனாவில் 1,300 அடி உயர
கண்ணாடி கட்டிடத்தில் ஏறி பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஸ்பைடர்மேன் புதிய சாதனை
படைத்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஆலென் ராபர்ட்(வயது 50). உலகின் உயரமான கட்டிடங்கள்
மீது கயிறு, பாதுகாப்பு சாதங்கள் ஏதுமின்றி ஏறி சாதனை படைப்பதே இவரது பொழுது
போக்காகும். இதனால் ஸ்பைடர்மேன் என்ற சிறப்பு பெயரும் இவருக்கு உண்டு. மிகவும் சவால் நிறைந்த கட்டிடமாக கருதப்படும் சீனாவின் செங்சோ நகரில் உள்ள 1,300 அடி உயரம் கொண்ட “போர்டலேசா டவர்” மீது ஏறி ராபர்ட் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார். இக்கட்டிடத்தின் முதல் 400 அடிக்கு மேல் பயங்கரமாக வழுக்கும் தன்மையுடன் கூடிய கண்ணாடி மற்றும் உலோகத்தாலான வெளிப்புறச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கை, கால்களை ஊன்றக்கூடிய வகையில் பிடிமானம் சற்றும் இல்லாததால், இந்த கட்டிடத்தின் மீது ஏறுவது மிகவும் சவால் நிறைந்ததாக கருதப்பட்டது. இதனால் வேறு வழியின்றி கண்ணாடி சுவரில் சில சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு கயிறு போன்றவற்றின் துணையோடு, ராபர்ட் கட்டிடத்தின் மீது ஏற ஆரம்பித்தார். முதல் 400 அடியை சிரமமின்றி ஏறி முடித்த ராபர்ட், பின் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து இரண்டு மணி நேரத்தில் உச்சியை சென்றடைந்தார். ராபர்ட் சீனாவில் இதற்கு முன் கடந்த 2007ஆம் ஆண்டில் ஷாங்காய் மாகாணத்தில் உள்ள 1,400 அடி உயரம் கொண்ட ஜின் மாவ் டவரில் ஏறி சாதனை படைத்தார். கடந்த மார்ச் மாதம் துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டடமான "புர்ஜ் கலிபா" டவர் மீது ஏறி உலக மக்களின் கவனத்தை கவர்ந்து பாராட்டு பெற்றார். 2, 716 அடி உயரம் கொண்ட இக் கட்டிடத்தின் மீது ராபர்ட் ஏறும் போது பயங்கர பாலைவனக்காற்று வீசிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ![]() ![]() ![]() ![]() ![]() |
வேலியை தாண்டி கூண்டுக்குள் குதித்த நபரை கடித்து குதறிய புலி
ஞாயிறு, செப்டம்பர் 23, 2012
தகவல்கள் புகைப்படங்கள்
| ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2012 |
| By.Rajah.அமெரிக்காவில் கூண்டுக்குள் குதித்த
வாலிபரை புலி கடித்து குதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரான்ஸ் மிருகக்காட்சி சாலையில் புலிகள்
இருக்கும் பகுதிக்குள் வேலியை தாண்டி ஒருவர் குதித்துள்ளார். அதைக் கண்ட 12 வயது புலி ஒன்று அவரை கடித்து குதறியது. அவரது மரண ஓலத்தைக் கேட்ட மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் கார்பன்டை ஆக்சைடு தீயணைப்பு கருவி மூலம் காற்றை பீய்ச்சி அடித்து அந்த புலி அவரை விட்டு விலகிச் செல்லுமாறு செய்தனர். பின்னர் அந்த இளைஞரை வேலிக்கு கீழே இருக்கும் சிறிய இடைவெளி வழியாக வருமாறு கூறி மீட்டனர். ![]() ![]() ![]() |
| முகப்பு |
சீனாவில் பள்ளியில் புகுந்து குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மர்ம ஆசாமி: 3 பேர் பலி
ஞாயிறு, செப்டம்பர் 23, 2012
செய்திகள்
| ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2012 |
| By.Rajah.சீனாவில் ஆரம்ப பள்ளியின்
வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், குழந்தைகளை கொடூரமாக தாக்கியதில் மூன்று
பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சீனாவின் தென் பகுதியில் வியட்னாம் எல்லையையொட்டி பிங்னான் என்ற நகரம்
அமைந்துள்ளது. இங்குள்ள ஆரம்ப பள்ளி ஒன்றில் மதிய உணவு இடைவேளையின் போது குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கோடாரியுடன் வந்த மர்ம நபர் திடீரென குழந்தைகளை தாக்கினார். இதில் 6 வயது முதல் 12 வயதுள்ள 3 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர், மேலும் 13 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட வியூ என்ற நபரை பொலிசார் கைது செய்தனர். விசாரணையில் இவர் மனநோயாளிகள் மையத்தில் இருந்து தப்பி வந்தவர் என்பது தெரியவந்தது. ஆனால் ஏன் தாக்குதல் நடத்தினார் என்பதற்கான காரணம் தெரியவில்லை |
அமெரிக்காவில் பாகிஸ்தானுக்கு எதிரான மசோதா தோல்வி
ஞாயிறு, செப்டம்பர் 23, 2012
செய்திகள்
| ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2012, |
| By.Rajah.அமெரிக்க
நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிப்பதற்கு எதிரான மசோதா தோல்வி
அடைந்தது.
அமெரிக்க நாடாளுமன்ற மேல் சபையில் உறுப்பினர் ராண்ட் பால் மசோதா ஒன்றை தாக்கல்
செய்தார். அதில் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் குறித்து அமெரிக்காவுக்கு தகவலளித்த மருத்துவர் ஷகில் அப்ரிதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யும் வரை, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியுதவியை நிறுத்தி வைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. விவாதத்துக்குப் பின் இந்த மசோதாவுக்கு 10 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர், 81 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து மசோதா தோல்வியடைந்தது. மேலும் இதே மசோதாவில் அமெரிக்கத் தூதரகங்கள் மீது தாக்குதல் நிகழ்ந்த லிபியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்த வேண்டும். இத்தாக்குதலுக்கு காரணமானவர்களைக் கைது செய்த பின் தான், நிதி உதவியைத் தொடர வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இது குறித்து ராண்ட் பால் கூறுகையில், இந்நாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதற்கு அமெரிக்க குடிமக்களில் பெரும்பாலானோர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நாடுகளுக்கு ஆதரவாக உள்ளது ஏன் என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில எனது போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார் |
விநாயகர் சிலையை கரைக்க சென்ற இடத்தில் மோதல்: போலிஸ் எஸ்.ஐ.,யை தாக்கிய 9 பேர் கைது
ஞாயிறு, செப்டம்பர் 23, 2012
செய்திகள்
23.09.2012.By.Rajah.தருமபுரி மாவட்டம், பிக்கனஹள்ளியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம், தங்கள் ஊரில் வைத்திருந்த விநாயகர் சிலையை ஒகேனக்கல் காவிரியாற்றில் கரைப்பதற்காக லாரியில் சிலையை எடுத்துக்கொண்டு சென்றனர்.
ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலையில் சாலையில் லாரியை நிறுத்தி ஆட்டம் போட்டுகொண்டு போக்குவரத்துகக்கு இடையூறு ஏற்படுதியுள்ளனர். ஒகேனக்கல் போலிஸ் எஸ்.ஐ., நந்தகுமார் தலைமையில் அங்கு சென்ற போலீஸார் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் லாரியை ஓரமாக நிறுத்துமாறு கூறியுள்ளார்.
அப்போது மது அருந்தி போதையில் இருந்த இளைஞர்கள், போலிஸ் எஸ்.ஐ.யை பார்த்து கையசைத்தபடியே சத்தம் போட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த எஸ்.ஐ நந்தகுமார் லாரியில் இருந்தவர்களை நோக்கி லத்தியை சுழற்றியபடியே மிரட்ட சென்றுள்ளார். அப்போது லாரியில் இருந்தவர்கள் எஸ்.ஐ.நந்தகுமாரை கீழே தள்ளி தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக தகவல் கிடைத்தத்தும், அங்கு வந்த போலீசார் லாரியிலிருந்த சிலரை விசாரணைக்கு காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரியில் வந்த மற்றும் சிலர் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து, போக்குவரத்து இடையூறு செய்த, பிக்கனஹள்ளியை சேர்ந்த செல்லத்துரை (22), மோகன்ராஜ் (24), ரத்தினகுமார் (20), விஜய் (21), வினோத் (19), சாம்ராஜ் (43), அண்ணத்துரை (43), மகேந்திரன் (36), சுதாகர் (31) ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இதில், வினோத் (19), ரத்தினகுமார் (20), விஜய் (21) ஆகியோர் சங்ககிரி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்
சனி, 22 செப்டம்பர், 2012
முகத்திரையை அகற்ற சொன்னதால் ஆத்திரம்: பொலிசை கடித்த பெண்
சனி, செப்டம்பர் 22, 2012
செய்திகள்
| 22.09.2012.By.Rajah.பிரான்சில்
முகத்திரையை அகற்றச் சொன்ன பெண் பொலிசைக் கடித்த முஸ்லிம் பெண்ணுக்கு, இரண்டு மாத
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பிரான்சில் மெர்செல் நகரைச் சேர்ந்தவர் லூயி மேரி சூசி(வயது 18). முஸ்லிம்
மதத்தைச் சேர்ந்த இவர், ஜூலை மாதம் கறுப்பு அங்கியால் உடல் முழுவதையும் மறைத்தபடி
மசூதிக்கு செல்ல முயன்றார். பிரான்ஸ் சட்டப்படி உடல் மற்றும் முகத்தை மூடியபடி பொது
இடத்தில் செல்வது குற்றம். எனவே இரண்டு பெண் பொலிசார் லூயியை வழிமறித்து அவரது அடையாள அட்டை மற்றும் ஆவணங்களைக் காட்டும்படி கூறினர், முகத்திரையையும் அகற்றும்படி உத்தரவிட்டனர். அவர்கள் சொன்னதை கேட்காமல் லூயி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், கோபத்தின் உச்சிக்குச் சென்ற லூயி, பெண் பொலிஸ் ஒருவரை திடீரென கடித்து விட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பொலிசை கடித்ததை ஒப்புக் கொண்டார் லூயி. இதையடுத்து அவருக்கு இரண்டு மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார் |
சர்ச்சைக்குரிய திரைப்படத்தை யூடியூபிலிருந்து நீக்க முடியாது: அமெரிக்க நீதிமன்றம்
சனி, செப்டம்பர் 22, 2012
செய்திகள்
| 22.09.2012.By.Rajah..பிந்திய செய்திகள்..முகமது நபியை தவறாக
சித்திரித்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் திரைப்படத்தை சமூக இணையதளமான யூடியூபில்
இருந்து நீக்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்த திரைப்படத்தில் நடித்த சின்டி லீ கார்சியா, தனக்கு கொலை மிரட்டல்
வருவதாகவும், தன்னுடைய சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும், பல்வேறு நிலைகளில்
பிரச்னைகளை சந்தித்து வருவதால் சர்ச்சைக்குரிய திரைப்படத்தை யூடியூபில் இருந்து
நீக்க வேண்டும் என்று கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் கடந்த 19ஆம் திகதி வழக்கு
தாக்கல் செய்தார். வழக்கின் பிரதிவாதியாக கூகுள் மற்றும் யூடியூப் இணையத்தளங்களை சேர்த்துள்ளார். அந்த வழக்கில், வீரத்தை வெளிப்படுத்தும் காட்சியில் தன்னை நடிக்க வைப்பதாக தயாரிப்பாளர் கூறியதால் நடித்தேன். திரைப்படத் தயாரிப்பின் போது நபிகள் நாயகம் தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி லூயிஸ் லாவின், இந்தத் திரைப்படத்தை யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளதற்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தார் |
முஸ்லிம்களை இழிவுபடுத்தும் திரைப்படம்: சமாதானப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா
சனி, செப்டம்பர் 22, 2012
காணொளி
| 22.09.2012.By.Rajah.முகமது நபியை இழிவுபடுத்தும்
வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் நாடுகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த போராட்டத்தின் போது அமெரிக்க தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களை
போராட்டக்காரர்கள் தாக்கினார்கள். இதில் லிபியாவில் உள்ள தூதரக அதிகாரி கிறிஸ்டோபர்
ஸ்டீவன்ஸ் உள்பட பலர் கொல்லப்பட்டனர். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒபாமா தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. பிரச்சினைக்குரிய திரைப்படத்தை வெளியிட்ட யூடியூப் நிறுவனத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் அமெரிக்காவுக்கு எதிராக பரவியுள்ள பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் ஒபாமா அரசு தொலைக்காட்சி, எப்.எம்.ரேடியோ மற்றும் சமூக வலைத்தளங்களில் தங்களுக்கும், இந்த திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. சுமார் 30 வினாடிகள் தொலைக்காட்சியில் வரும் இந்த பிரசார விளம்பர படம் 7 சேனல்களில் ஒளிபரப்பாகிறது. இதற்காக பாகிஸ்தானில் உள்ள டெலிவிஷன் சானல் நிறுவனத்துக்கு 70 ஆயிரம் டொலர் பணம் வழங்கப்பட்டதாக செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலாந்து கூறியுள்ளார். பிரசார விளம்பர படத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறுகையில், அமெரிக்கா எல்லா மதத்தையும் மதிக்கிறது. மதத்துக்கு எதிரான எந்த இழிவு செயல்களையும் அமெரிக்கா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று குறிப்பிட்டு உள்ளார். ஹிலாரி கிளிண்டன் கூறுகையில், நாங்கள் மிகத்தெளிவாக இருக்கிறோம். இந்த வீடியோ காட்சிக்கும், அமெரிக்க அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் அதை உறுதியாக எதிர்க்கிறோம். நாங்கள் மதசகிப்பு தன்மைகொண்டவர்கள் என்றார். அமெரிக்காவின் இந்த பிரசார விளம்பரம் உருது மொழியில் வெளியானது. மேலும் பல எப்.எம்.ரேடியோவிலும் இந்த விளம்பரம் ஒலிபரப்பப்பட்டது |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
































