siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 6 மே, 2013

அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய லிபியாவில் ??


 அரசியல் தனிமைப்படுத்தும் சட்டம் என்ற இந்த மசோதா, லிபிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே, நீண்ட மாதங்களாக விவாதத்தில் இருந்து வந்தது. கடாபியின் புரட்சிப்படையில் இருந்த அதிகாரிகள், அரசியல் அமைப்புச் சட்டங்களில் தலையிட்டுள்ளதாகவும், அவர்களின் தலையீட்டினால் சட்டங்கள் தெளிவில்லாமல் அமைந்துள்ளதாகவும், அவர்களின் தலையீடு அறவே நீக்கப்படவேண்டும் என்பதற்காகவும் இத்தகைய ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
 புதிய சட்டதிருத்தம் குறித்த சுற்றறிக்கைகளுக்கு இன்னும் இறுதிவடிவம் கொடுக்கப்படவில்லை. கடந்த 40 வருடங்களாக நடைபெற்ற கடாபியின் ஆட்சியை 2011 ஆம் ஆண்டு நீக்க, துணைபுரிந்திருந்தாலும் அவர் ஆட்சிக்காலத்தில் பதவியில் இருந்த அனைத்து அதிகாரிகளையும் நீக்கும் வகையிலேயே புதிய சட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

லிபியா நாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்ட சர்வாதிகாரி முயாம்மர் கடாபியின் ஆட்சிக்காலத்தில், பதவியில் இருந்த அதிகாரிகள் அனைவரையும் பதவி நீக்கம் செய்யும் வண்ணம் ஒரு புதிய மசோதா, ஞாயிறு அன்று அவர்களது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 200 உறுப்பினர்களில் 169 பேர் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பில், பங்கு பெறாதவர்களில் குறிப்பிடத்தக்கவர் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் முகமது அல் மெகாரிப் ஆவார். புதிய சட்டத்தின்படி, இவரும் பதவிநீக்கம் செய்யப்படும் அரசியல் தலைவர்களில் ஒருவர் ஆவார். பிரதமர் அலி சிடானும், கடாபி காலத்தில் பதவியில் இருந்ததால், அவரும் பதவி நீக்கம் செய்யப்படுபவர்களில் ஒருவர் ஆகின்றார்.

பள்ளிகளில் பெண்கள் விளையாட சவூதி அரசு


தனியார் பெண்கள் பள்ளிகளில், சவூதி அரேபியா அரசு முதன்முதலாக விளையாட்டை அங்கீகரித்துள்ளது. அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சகம், இதுகுறித்த அறிக்கையை சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில் வெளியிட்டது.
 சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட புதிய விதிமுறைகளின்படி, பெண்கள் பள்ளிகளில், பெண்கள் மேற்பார்வையாளர்களால் கண்காணிக்கப்பட்டு, விளையாட்டுக்குரிய தேவையான உபகரணங்களும், ஆடைகளும் இருக்கும் பட்சத்தில், பெண்கள், உடற்கல்வி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 ஷரியா மதக் கோட்பாடுகள், பெண்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை ஆதரிக்கின்றதாக கல்வி அமைச்சகத்தின் தகவல் அதிகாரி முகமது அல் தகினி தெரிவிக்கின்றார். சவூதி அரசு, பெண்கள் விளையாட்டிற்கு வெளிப்படையாக அனுமதி அளிப்பது இதுவே முதன் முறையாகும்.
ஆயினும், இது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செயல் அல்ல என்று அம்மக்களில் சிலர் கருதுகின்றனர். தனியார் பள்ளிகளில் ஏற்கனவே விளையாட்டுப் பிரிவு தனியே இயங்கிக்கொண்டிருக்கும்போது, இத்தகைய முயற்சி பொதுப் பள்ளிகளில் வேண்டுமானால் புதிய நடைமுறையைக் கொண்டுவர ஏதுவாக இருக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

மீனவர்களுக்கு ஆந்திராவில் தர்ம அடி,

 ஆந்திர மாநிலம் காகிநாடா அருகே இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி புகுந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 11 பேர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இந்திய கடலோரக்காவல் படையால் கைது செய்யப்பட்ட அவர்கள் பின்னர் காக்கிநாடா மரைன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள் 11 பேரும், தும்முலாபேட்டையில் 2 காவலர்கள் பாதுகாப்புடன் ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்தனர். மின்சாரம் இல்லாத நேரத்தில், அவர்கள் அனைவரும் காற்று வாங்குவதற்காக வெளியே சென்று இருக்கிறார்கள்.
 அப்போது, அவர்கள் அந்த ஊர் காரர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த ஊர் காரர்கள் சேர்ந்து இலங்கை மீனவர்களுக்கு தர்ம அடி கொடுத்திருக்கிறார்கள்.
இதில் பலத்த காயமடைந்த இலங்கை மீனவர்களில் 3 பேர், மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னதாக பிடிபட்ட மற்ற 14 இலங்கை மீனவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐதராபாத் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.




 

ஜெயலலிதாவுக்கு எதிராக தீக்குளித்த ??


திருவண்ணாமலை மாவட்டத்தில் வாலிபர் ஒருவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இவர் அன்புமணி ராமதாஸ் கைதைக் கண்டித்து தீக்குளித்ததாக கூறப்படுகிறது.
பாமக தலைவர்கள் கூண்டோடு கைதாகி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். டாக்டர் ராமதாஸ், திருச்சி சிறையில் அடைபட்டுள்ளார். அவரது மகனும், இளைஞர் அணி தலைவருமான அன்புமணியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு திருவண்ணாமலை மாவட்டம் அருகே தீச்சட்டிப்பட்டு கிராமத்தில் ஜெகன் என்ற 22 வயது வாலிபர் திடீரென தீக்குளித்து விட்டார்.
அவரை அங்கிருந்து சென்னை கொண்டு வந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவர் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீவைத்து விட்டார்.
இதுகுறித்து ஜெகன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணிகூறுகையில், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கைதானது முதல் முதல்வர் ஜெயலலிதாவையும், அதிமுகவையும் திட்டிக் கொண்டிருந்தார் ஜெகன்.
நேற்றும் கூட முதல்வரைத் திட்டியபடி இருந்தார். இரவில் திடீரென தீவைத்துக் கொண்டார் என்றார். ஜெகன் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது
 

இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன இராணுவம் வெளியேற்றம்


 இவர்கள் சுமார் 19 கி.மீட்டர் தூரம் வரை இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். அப்பகுதியை ஆக்கீரமித்த சுமார் 50 சீன ராணுவ வீரர்கள் அங்கேயே முகாம்களை அமைத்து தங்கியுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதிக்குள் கடந்த (ஏப்ரல்) மாதம் 15-ம் தேதி அத்துமீறி ஊடுருவிய சீன ராணுவத்தினர் வெளியேறினர்.
இந்திய எல்லையை விட்டு வெளியேறுமாறு இந்தியா - சீனா ராணுவ உயரதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்ற 3 கொடி கூட்டங்களும் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில், 4-வது முறையாக நேற்றும் இரு நாடுகளின் உயரதிகாரிகளுக்கு இடையில் கொடி கூட்டம் நடைபெற்றது.
சுமார் 45 நிமிடம் நடைபெற்ற இந்த கூட்டத்தின் போதும், சீனா தனது நிலைப்பாட்டில் பிடிவாதம் காட்டியுள்ளது.
‘லடாக்கில் உள்ள தவுலத் பேக் ஓல்டி எல்லைப் பகுதியில், சீன எல்லைக்குள் சுமார் 300 மீட்டர் தூரம் ஆக்கிரமித்துள்ள பகுதியில் இருந்து முதலில் இந்தியா வெளியேற வேண்டும்.
அதன் பிறகே, இப்போது ஆக்கிரமித்த பகுதியை விட்டு நாங்கள் வெளியேறுவது தொடர்பாக யோசிக்க முடியும்’ என சீனா கூறியது.
இதனையடுத்து, ஏற்பட்ட சமரச உடன்படிக்கையின்படி, லடாக்கில் உள்ள தவுலத் பேக் ஓல்டி எல்லைப் பகுதியில் இருந்து இந்தியாவும், கடந்த 15-ம் தேதி ஆக்கிரமித்த இந்திய பகுதியிலிருந்து சீனாவும் இன்றிரவு 7.30 மணியளவில் வெளியேறின
 

ஞாயிறு, 5 மே, 2013

லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு ஆயுள்//


சீனாவின் புதிய அதிபராக ஜீ ஜின்பிங்
அங்குள்ள ஷான்டோங் மாகாணத்தில் துணை கவர்னராக பதவி வகித்த ஹூயாங் ஹெங் என்பவர் ரூ.10 கோடி (2 மில்லியன் டாலர்) லஞ்சம் வாங்கியதாக பிடிபட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்யவும் கோர்ட்டு உத்தரவிட்டது
பதவி ஏற்ற பிறகு ஊழல், லஞ்சத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

14 குழந்தைகள் உட்பட 77 பேர் ?


சிரியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பனையாஸ் நகரில் சன்னி முஸ்லிம்கள் குறைவான எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியின் பழங்குடியினரான அவர்கள் மீது அதிபரின் படைகள் படுகொலைகளை அரங்கேற்றி வருகின்றது.
ராணுவம் மற்றும் அதிபரின் ஆதரவாளர்கள் படை இங்கு நடத்திய வேட்டையில் சன்னி பழங்குடியினர்களின் 14 குழந்தைகள் உள்பட 77 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் சடலங்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
முன்னதாக சன்னி பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பைதா பகுதியில் நடந்த படுகொலையில் 72 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வாரத்தில் அரசுப்படையினர் நடத்திய இரண்டாவது மிகப்பெரிய படுகொலை இது என்று சொல்லப்படுகிறது
 

சனி, 4 மே, 2013

செயற்கை உறுப்பு சிகிச்சையில் புதிய ஊழல்


பிரான்சில் இடுப்பெலும்பு, மூட்டு எலும்பு பொருத்துவதில் ஐரோப்பியத் தரம் வாய்ந்த செயற்கை உறுப்புகளை வாங்கிப் பொருத்துவதில்லை என்ற உண்மை தற்பொழுது அம்பலமாகியுள்ளது.
செயற்கை மார்பகம் பொருந்தியதில் தரமான உள்ளீட்டை(சிலிகான் ஜெல்களை) வைக்கத் தவறியது குறித்து வழக்கு ஒன்று நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது சுமார் 650 பேருக்கு ஐரோப்பியத் தரச் சான்றிதழ் பெறாத செயற்கை உறுப்புகளை இடுப்பிலும், கால் மூட்டிலும் பொருந்தியது தெரியவந்தது.
தற்பொழுது இந்த நோயாளிகள் அனைவரையும் திரும்பப் பரிசோதித்து இந்த உறுப்புகள் முறையாக செயல்படுகின்றனவா என்று அறிய மருத்துவர்களிடம் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
ஆனால் இது குறித்து சுகாதார அதிகாரிகள் கூறுகையில், ஐரோப்பியத் தரச் சான்றிதழ் பெறாததால் இந்த உறுப்புகள் மோசமானவை என்று கூற இயலாது. இவற்றால் நோயாளிக்கு எந்த இடர்ப்பாடும் கிடையாது என்று
 

வணிக வளாக விபத்து: பலி எண்ணிக்கை 509ஆக..


 வங்கதேச தலைநகர் தாகாவில் எட்டு அடுக்கு கட்டிடம் நொறுங்கி விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 509ஆக உயர்ந்துள்ளது.
வங்கதேசத்தின் தாகா நகரில் ராணா பிளாசா என்ற பெயரில் எட்டு அடுக்கு வணிக வளாகக் கட்டிடம் பத்து நாட்களுக்கு முன் நொறுங்கி விழுந்தது.
இதில் ஏராளமானவர்கள் புதையுண்டனர், 2500 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 509ஆக உயர்ந்துள்ளது.
இந்த வணிக வளாகத்தில் 300 கடைகளும், ஐந்து ஜவுளி நிறுவனங்களும், ஒரு வங்கி கிளையும் செயல்பட்டு வந்தன.
முதலில் ஐந்து மாடியாக இருந்த இந்த கட்டிடம் முறைகேடாக எட்டு மாடி கட்டடமாக உயர்த்தப்பட்டது.
இதற்கு அனுமதி வழங்கிய நகராட்சி இன்ஜினியர்கள், இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
கடைகள், அலுவலகங்கள் மட்டுமே செயல்படுவதற்கு ஏற்ற இந்த கட்டிடத்தில் சட்டவிரோதமாக ஐந்து ஜவுளி மில்கள் இயங்கியுள்ளன.
அதிசக்தி கொண்ட ஜெனரேட்டர்கள் இந்த ஆலையில் இயங்கியதால் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதை மீறி மேலும் மூன்று மாடிகளை கட்டிய இன்ஜினியர் அப்துர் ரசாக் கானை பொலிசார் கைது செய்தனர்.
இந்தியாவுக்கு தப்பி செல்ல முயன்ற இந்த கட்டிடத்தின் உரிமையாளர் சோகல் ராணாவும் கைது செய்யப்பட்டுள்ளார்
 

பேரழிவை ஏற்படுத்த சகோதரர்கள் திட்டமிட்டது அம்பலம் ,,

 
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய சகோதரர்கள், சுதந்திர தினத்தன்றும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தயத்தின்போது 2 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய தமர்லான் சர்னேவ்(வயது 29) என்பவர் தப்பி ஓட முயன்றபோது ஏப்ரல் 18ஆம் திகதி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதே நாளில் ஜோகார் சர்னேவ்(வயது 19) என்பவரை பொலிஸார் கைது செய்தனர். இவ்விருவரும் செசன்யாவைச் சேர்ந்த சகோதரர்கள் என விசாரணையில் தெரிய வந்தது.
ஜோகாரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4ஆம் திகதி வெடிகுண்டு தாக்குதல் நடத்துவது என முதலில் தீர்மானித்திருந்தது தெரியவந்துள்ளது.
எனினும் எதிர்பார்த்த காலத்துக்கு முன்னதாகவே வெடிகுண்டு தயாராகி விட்டதால் முன்கூட்டியே தாக்குதலை நடத்தியதாக ஜோகார் கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் நடைபெறும் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்று பாஸ்டன் நகரிலும் நடைபெறுவது வழக்கம். ஆனால், எந்த நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டனர் என்ற தகவல் தெரியவில்லை.
குக்கர் மூலம் வெடிக்கச் செய்த அந்த வெடிகுண்டை தமது குடியிருப்பில் வைத்தே தனது சகோதரர் தமர்லான் தயாரித்ததாக ஜோகார் கூறியுள்ளார். பின்னர் தாக்குதல் நடத்துவதற்கான இடத்தை அடையாளம் காண்பதற்காக பாஸ்டன் நகரம் முழுவதும் நோட்டம் விட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஜோகார் மீது பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது