siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

குழந்தைக்காக கொழும்பில் உள்ள நார்வே தூதரகம்


Sunday 07 October2012..BY.Rajah.முன்இலங்கைத்தமிழர்கள் போராட்டம்குழந்தைகளை தங்களிடமிருந்து பிரித்து உறவினர்களிடம் கொடுத்த நார்வே அரசை கண்டித்து கொழும்பில் உள்ள நார்வே தூதரகம் முன் இலங்கைத் தமிழர்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.
நார்வேயில் குழந்தைகளுக்குத் தேவையான வசதிகளை வீடுகளில் பெற்றோர்கள் செய்யாவிட்டாலோ, அவர்களைச் சரிவர பராமரிக்காவிட்டாலோ குழந்தைகள் நல சேவைப் பிரிவு அதிகாரிகள், பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.
முதல் கட்டமாக குழந்தைகளைப் பெற்றோர்களிடமிருந்து பிரித்து, காப்பகத்தில் வைக்கின்றனர்.
பின்னர், பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பின், அக்குழந்தையைப் பெற்றோரின் உறவினர்களிடம் ஒப்படைக்கின்றனர்.
அந்நாட்டு அரசின் இந்நடவடிக்கையை கண்டித்து இலங்கையைச் சேர்ந்த அனந்தராஜா உள்ளிட்டோர், கொழும்பில் உள்ள நார்வே தூதரகத்தில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.
இவர்கள் அனைவரும் நார்வேயில் குடிபெயர்ந்தவர்களாவர். அங்கு, இவர்களது குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து பிரித்து உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அனந்தராஜா கூறுகையில், ""எனது மூன்று குழந்தைகளை நார்வே அரசு அதிகாரிகள் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுவிட்டனர். இதே போன்ற பிரச்னையால் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்கள் கோரிக்கைக்கு அந்நாட்டு அரசு செவிசாய்க்காவிட்டால், விரைவில் ஆஸ்லோவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்'' என்றார்.
இது குறித்து நார்வே தூதரக அதிகாரிகள் கூறியது:÷""வீடுகளில் குழந்தைகளுக்குத் தேவையான வசதிகள் செய்து தர வேண்டும். குழந்தைகளை முறையாகப் பராமரிக்க வேண்டும்.
இந்த விதிமுறைகளுக்கு நார்வே அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. சரியாக குழந்தைகளைப் பராமரிக்காத பெற்றோர் பற்றி உறுதியாகத் தெரியவந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது'' என்றனர்.
சில மாதங்களுக்கு முன் நார்வேயில் வசித்த இந்திய தம்பதியரின் 2 குழந்தைகளும், இதேபோன்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது