siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 8 அக்டோபர், 2012

தாலிக்கொடி திருடனை பிடிக்க கொழும்பில் நடந்த சுவாரஷ்ய சம்பவம்!




Monday 08 October 2012 .By.Rajah.கொழும்பில் வாகன நெரிசல்கள் இருந்தாலும் மின்விளக்கு சமிக்ஞைகள் இயங்கும் சந்திகளில் வாகனங்கள் நிறுத் தப்படும் போது அவற்றை நெருங்கி பிச்சை கேட்போரின் தொல்லை நாளாந்தம் அதிகரித்தவண்ணம் இருக்கின்றது.

அத்துடன், கைக்குழந்தைகளுடன் பெண்கள் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களின் ஜன்னலைத் தட்டி பிச்சை கேட்பார்கள்.
வாகன ஓட்டிகள் அவர்களின் கையில் உள்ள பச்சிளம் பாலகர்களைப் பார்த்து பரிதாபப்பட்டு பணம் கொடுப்பார்கள். இந்தப் பாலகர்கள் இப்பெண்களின் பிள்ளைகளா? அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்ட பிள்ளைகளா என்ற சந்தேகம் இப்போது பொலிஸார் மனதில் வலுப்பெற்றுள்ளது.
இந்தப் பாலகர்களுக்கு இப்பெண்கள் உரிய முறையில் பாலுணவைக் கூடக் கொடுப்பதில்லை. பாலகர்கள் ஆரோக்கியமாக இருந்தால் எவரும் பரிதாபப்பட்டு உதவி செய்யமாட்டார்கள் என்பதற்காகவே இந்தப் பாலகர்கள் இவ்விதம் துன்பப்படுத்தப்படுகிறார்கள்.
அதுபோல் முடவர்கள், குருடர்கள் ஆகியோரும் வாகன ஓட்டிகளைத் துன்புறுத்தி பணம் பறிக்கிறார்கள்.
கடந்த வாரம் பொரளையில் நடந்த ஒரு சுவாரஷ்யமான சம்பவம்!

பொரளையிலுள்ள முச்சந்தி ஒன்றில் பயணித்த  தமிழ் பெண் டாக்டர் ஒருவர் தனது காரை நிறுத்திய போது ஒரு பிச்சைக்காரன் ஜன்னலைத் தட்டி பிச்சை கேட்டதைப் பார்த்த அந்தப் பெண் டாக்டர் அவனுக்கு 10 ரூபாவை ஜன்னலைத் திறந்து கொடுக்க முற்பட்டார்.

அப்போது அந்த பிச்சைக்கார திருடன் அப்பெண்மணியின் கழுத்தில் இருந்த தங்கத் தாலிக்கொடியைப் பிடித்து அறுத்துச்செல்ல முயற்சித்தான். அப்போது  மதிநுட்பம் மிக்க அந்தப் பெண் டாக்டர் தனது காரின் power windows ஐ அவன் எதிர்பாக்காதபோது திடீர் என்று அழுத்தி மூடிவிட்டார்.
இதனால் தப்பியோட முடியாமல் கார் ஜன்னலில் சிக்கியிருந்த கையை விடுவிக்க முடியாமல் அவன் வேதனையில் புலம்பிக்கொண்டிருந்த போது அருகில் இருந்த பொலிஸார் அவனைக் கைது செய்தனர்.

செய்த குற்றத்துக்கு எனது வாகனம் அவனைத் தண்டித்து விட்டது எனக்கு பொலிஸ் நிலையத்துக்கும் நீதிமன்றத்துக்கும் செல்ல நேரம் இல்லை, அவனை கடுமையாக எச்சரித்து விடுவியுங்கள் என்று கூறிவிட்டு அந்த வீரப் பெண்மணி அங்கிருந்து தனது காரில் பறந்து சென்றுவிட்டாள்.