siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 8 அக்டோபர், 2012

கறுப்புப் பண வரி ஒப்பந்தத்துக்கு தேர்தல் மிரட்டல்

திங்கட்கிழமை, 08 ஒக்ரோபர் 2012, By.Rajah.
ஜேர்மனியின் கறுப்புப்பண முதலைகள் சுவிஸ் வங்கிகளில் வைத்திருக்கும் ரகசிய இருப்புக்கு அந்த வங்கிகளே வரி வசூலிக்கும் ரூபிக் ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. இந்நிலையில் ஜேர்மன் அரசுக்கு துரோகம் செய்யும் இந்த பணமுதலைகளுக்கு ஆதரவாக இருப்பதை விரும்பாததால் எதிர்கட்சியினர் இந்த பிரச்சினையை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தி வெற்றி பெற திட்டமிட்டுள்ளனர்.
கறுப்புப்பணத்தைச் சட்ட ரீதியாக்கும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் சுவிஸ் வங்கிகள் தங்களின் வாடிக்கையாளரின் ரகசியத்தை பாதுகாக்க வேண்டி அவர்களின் பெயர்களை வெளியிடாது.
வரியை மட்டும் இருப்பு நிதியிலிருந்து எடுத்து உரிய நாடுகளுக்கு வழங்கும் இந்த ஒப்பந்தம் இன்னும் ஜேர்மன், பிரிட்டன், ஆஸ்ட்ரியாவில் கையெழுத்தாக வில்லை.
ஜேர்மனியில் அமைச்சரவையிலும் நாடாளுமன்றத்தின் கீழவையிலும் அரசுக்கு எந்தப்பிரச்னையும் இருக்காது.
ஆனால் மாநில முதல்வர்களை உறுப்பினராகக் கொண்ட மேலவை இந்த வரி ஒப்பந்தத்துக்கு சம்மதம் தராது என்று அரசியல் அறிஞர் கெர்ட் லாங்குத் கூறுகிறார்.
வரும் தேர்தலில் மைய, இடது, சமதர்ம குடியரசு கட்சியினர் அரசை கறுப்புப்பண முதலைகள் ஏமாற்றுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
பிரதம வேட்பாளரான பியர் ஸ்ட்டீன் புரூக்கும் இந்த வரி ஒப்பந்தம் ஒரு தேச துரோகம் என்பதை கடந்த சில நாட்களாக பேசிவருகிறார்.
இந்த வரி ஏய்ப்பு என்பது ஜேர்மனியின் பிரச்சினை, இதற்கு சுவிஸ் ஜேர்மனிக்கு உதவ வேண்டும்.
வரிஏய்ப்பை சிறிய குற்றமாக கருத இயலாது. தேசத்துக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் ஏமாற்றுவேலை என்கிறார் ஸ்ட்டீன் புரூக்