siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

ஹோமுஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடற் பயிற்சி

வளைகுடா பிராந்தியத்தில் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஹோமுஸ் நீரிணைப் பகுதியில் ஈரான், தொடர்ந்து கடற்படை போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் பயிற்சி ஹோமுஸ் நீரிணையைச் சுற்றிய 10 லட்சம் சதுர கிலோ மீற்றர் பரப்பில் நடப்பதாக கடற்படை தளபதி ஹபிபோலோ சையரி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, இந்தப் பயிற்சியின்போது கப்பலிலிருந்து ஏவுகணைகளை வீசுவது, நீர்மூழ்கிகள் மூலம் தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அம்சங்கள் சோதிக்கப்படுகின்றன.
மேலும் எதிரி நாட்டுப் படைகளின் ஆக்கிரமிப்பு முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கான ஒத்திகை, வெற்றிகரமாக நடந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அணுசக்தித் திட்டங்களை முடக்குவதற்காக, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஹோமுஸ் நீரிணையை ஈரான் அடைத்துவிடும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

0 comments:

கருத்துரையிடுக