siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதில் துரிதசெயற்பாடு :யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்


.26.08.2012
யாழ். குடாநாட்டு பொலிஸ் நிலையங்கள் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் துரிதமாக செயல்பட்டு வருகின்றது. இந்த வகையில் கடந்த வாரம் மட்டும் 160 வழக்குகளை யாழ். மாவட்ட நீதிமன்றங்களில் பொலிஸார் தாக்கல் செய்துள்ளதாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரீகுகநேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடகவியலாளர்களுக்கும் யாழ். மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையே வாராந்தம் நடைபெறும் சந்திப்பு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரீகுகநேசன் தலைமையில் இடம் பெற்றது.
இதில் கருத்துக் கூறிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரீகுகநேசன்
பல்வேறு குற்றச்செயல்களையும் கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணம் பொலிஸாரினால் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் கடந்த வாரம் யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சர் பிரிவில் கள்ளச்சாராயம் விற்றல் ,குழுவாக சண்டையிட்டு; சிறு குற்றங்களில் ஈடுபடல் மற்றும் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் உட்பட நூற்றி ஐம்பத்தைந்துபேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்கள்.
காங்கேசன்துறை பொலிஸ் பகுதியில் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஐந்து பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை விட கடந்த காலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்;டவர்கள் சம்பந்தமான விபரங்கள் பெறப்பட்டுள்ளபோதிலும் குறிப்பி;ட்ட சந்தேக நபர்கள் பலர் தலைமறைவாக வேறு மாவட்டங்களில் மறைந்திருப்பதனாலும் அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸார் நடமாடும் சேவைகளைக் கிராமம் கிராமமாக நடத்துவதுடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளையும் போக்குவரத்து விழிப்புணர்வுகளையும் பரவலாக முன்னெடுத்து வருகின்றார்கள் எனவும் குறிப்பி;ட்டார்.