siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

தண்ணீருக்கு அலையும் கட்டாக்காலிகள் இறைச்சிக்கு வெட்டப்படும் கொடூரம்

26.08.2012.
 
நீர் நிலைகளை தேடிவரும் கட்டாக்காலி கால்நடைகளைப் பிடித்து இறைச்சிக்காக வெட்டப்படும் அதிர்ச்சியான சம்பவங்கள் தென்மராட்சி கிழக்குப்பகுதியில் அண்மைக்காலமாக அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.
இங்கு வெட்டப்படும் கால்நடைகளின் இறைச்சிகள் மீன்கொண்டு வருவோர் மூலம் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எழுதுமட்டுவாழ் தெற்குப்பகுதியில் கட்டாக்காலியாக அலையும் கால்நடைகள் அந்தப்பகுதியில் குளங்கள் நீரின்றி வற்றியதால் கழிங்கரை என்னும் இடத்துக்கு கூட்டம் கூட்டமாக தண்ணீர் குடிக்க வருகின்றன.
இந்தப்பகுதி பெரும் பற்றைகள் என்பதால் அந்த இடங்களில் தடங்கல் வைத்து மாடுகளைப் பிடித்து இறைச்சிக்காக வெட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தப்பகுதியில் உள்ள பற்றை மறைவுகளில் பெருமளவு மாடுகளின் தலைகளும் கழிவுகளும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
உரிய அதிகாரிகள் இவ்விடத்தில் நடவடிக்கை மேற்கொண்டு மாடுகளை வெட்டுவதைத் தடுக்குமாறு கேட்கப்பட்டுள்ளது அந்தப்பகுதியில் தூர்ந்து போயுள்ள குளங்களை ஆழமாக்கும் பணியை இவ்வாறு குற்றம் செய்வோருக்கு தண்டனையாக வழங்குமாறும் மக்கள் கேட்டுள்ளனர்.
தென்மராட்சி கிழக்குப்பகுதியில் 2000ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போது அங்குள்ள குடியிருப்பாளர்களால் வளர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான கால்நடைகள் கட்டாக்காலிகளாக அலைவது குறிப்பிடத்தக்கது.