siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

பெண்களின் தலைமுடியைப் பார்த்தால் புருஷனாக வேலை செய்யலாம் - சீனாவின் அதிசய கிராமம்!

 
 
02.08.2012. பெண்களில் ஒரு சிலருக்குதான் ஆறடி கூந்தல் இருக்கும்.

ஒருவர் பாக்கி இல்லாமல் அத்தனை பேருக்கும் ஆறடி கூந்தல் உள்ள சீன கிராமம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சீனாவின் குவாங்சி ஷுவாங் பகுதியில் உள்ளது ஹுவாங்லூ யாவ் என்ற கிராமம். இங்கு ‘யாவ்’ என்ற பழங்குடியினர் வசிக்கின்றனர். பெரும்பாலும் சிவப்பு நிற ஆடைகளையே அணிவதால் ‘ரெட் யாவ்’ என்று அழைக்கப்பட்டு வருகின்றனர்.பெரும்பாலும், பெண்களில் ஒரு சிலருக்குதான் ஆறடி கூந்தல் இருக்கும். ஹுவாங்லூ யாவ் கிராமத்தில் அத்தனை பெண்களுக்கும் சராசரியாக ஐந்தரை அடி நீள கூந்தல் இருக்கிறது. அதிகபட்சமாக ஒரு பெண்ணுக்கு 6.8 அடி நீளம் இருக்கிறது கூந்தல். ‘நீள முடி கிராமம்’ என்று இந்த கிராமம் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. மாப்பிள்ளை பார்க்கும் முன்பு 16 வயதில் முடி வெட்டிக் கொள்வார்களாம். அதற்கு பிறகு, வெட்டவே மாட்டார்கள்.
25 ஆண்டுகளுக்கு முன்பு வரை வித்தியாசமான நடைமுறையை யாவ் பழங்குடியினர் பின்பற்றி வந்திருக்கிறார்கள். பெண்ணின் கூந்தலை மற்ற ஆண்மகன் யாரும் பார்த்துவிடக் கூடாது. கணவனாக வரப்போகிறவன் அல்லது அந்த பெண்ணின் பிள்ளைகள் மட்டுமே பார்க்கலாம். வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும், வெளி ஆட்கள் வீட்டுக்கு வந்தாலும் முக்காடு ஒன்றை பெண்கள் அணிந்துகொண்டு விடுவார்கள்.
தெரியாத்தனமாக பெண்களின் கூந்தலை பார்த்த ஆண்களுக்கு என்ன தண்டனை தெரியுமா? 3 ஆண்டுகளுக்கு அவர்கள் வீட்டில் ‘கணவனாக’ வேலை பார்க்க வேண்டும். கடந்த 25 ஆண்டுகளாக இந்த விதிமுறைகளை மட்டும் யாவ் பழங்குடியினர் விட்டுவிட்டார்கள். ஆயுளில் ஒரே ஒருமுறை மட்டுமே முடி வெட்டிக் கொள்வது என்ற வழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். கோடை காலம் மற்றும் வசந்த காலத்தில் கிராமத்து பெண்கள் அனைவரும் ஜின்ஜியாங் ஆற்றுக்கு ஊர்வலமாக சென்று, தங்களது நீண்ட கூந்தலை அங்கு அலசுவதையும் ஒரு சடங்கு போல செய்து வருவது குறிப்பிடத்தக்கது

0 comments:

கருத்துரையிடுக