siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

மன்னார் நீதிமன்றம் விவகாரம்: ஊடகவியலாளர்களை மிரட்டிய பொலிஸ் அதிகாரி

 
 
வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012,
மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், மன்னார் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மங்கள வாத்தியம் இசைக்கப்படவுள்ளதாகவும் சில ஊடகவியலாளர்களுக்கு கெட்டகாலம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் மன்னாரைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
மன்னார் நீதிமன்றம் மீது கடந்த 18 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில், மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் செய்திகளை ஊடகங்களுக்கு வெளியிட்டு வந்தனர். இதன் நிமித்தம் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரினால் தொடர்ந்தும் மன்னார் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அதன் போது மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்களும் நீதிமன்றத்திந்கு சென்றனர்.
இதன் போது மன்னார் நீதிமன்ற பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இருந்த பொலிஸ் அதிகாரி சிறிகாந்தன் என்பவர், அப்பகுதியால் சென்ற மன்னார் ஊடகவியலாளர் ஒருவரை இடை மறித்து கடுமையாக கதைத்து எச்சரித்துள்ளார்.
மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சிறிகாந்தன் தற்போது அமைச்சர் றிஸாட் பதீயுதீனின் பாதுகாப்பு பிரிவு பொலிஸாக தன்னை அடையாளப்படுத்தி மன்னாரில் செயற்பட்டு வருகின்றார்.
குறித்த பொலிஸ் அதிகாரி, ஊடகவியலாளரை கடுந்தொனியில் அச்சுறுத்தியதோடு, அமைச்சர் றிஸாட் எவ்வளவோ நல்ல வேலைகளை செய்து வருகின்றார். அதனை ஊடகங்களில் வெளியிடாது அவருக்கு எதிராக செயற்பட்டு வருவதாக கடுமையாக எச்சரித்ததோடு, மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேர் தொடர்பிலும், கைது செய்யப்பட வேண்டிய 35 பேர் தொடர்பிலும் தொடர்ந்தும் செய்திகளை வெளியிட்டு வருகின்றீர்கள்.இது உங்களுக்கு நல்லதாக இல்லை.
இன்றுடன் (31-07-2012) நீதிமன்றம் மீதான தாக்குதல் வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்படும். அதன் பின் மன்னார் ஊடகவியலாளர்கள் பலருக்கு என்ன நடக்கப்போகின்றது என்பதை நீ பார். நாங்கள் இனி என்ன செய்வோம் என்று தெரியாது. சகல பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க தயாராக இருங்கள் என அச்சுறுத்தியுள்ளார்.
மன்னார் ஊடகவியலாளர்கள் சிலருக்கு வெகு விரைவில் மங்கள வாத்தியம் இசைக்கப்படவுள்ளதாகவும் குறித்த பொலிஸ் அதிகாரி, ஊடகவியலாளரை கடுமையாக அச்சுறுத்தியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் அதிகாரி ஒரு தமிழராகவும், மன்னாரைச் சேர்ந்தவராகவும் உள்ளார். கடந்த வன்னி யுத்தத்தின் போது காயமடைந்த பல நூற்றுக்கணக்காணவர்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அன்றைய காலகட்டத்தில் மன்னார் வைத்தியசாலையில் பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய குறித்த பொலிஸ் அதிகாரி சிறிகாந்தன், அங்கிருந்த பலரை சட்டவிரோதமாக வெளியில் விட்டு பணம் பெற்றுள்ளமையும் தெரிய வந்துள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரி, மன்னார் ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல் விடுத்தமை தொடர்பில் மன்னார் நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டதுடன் அவருக்கு எதிராக சட்டத்தரணிகளினுடாக வழக்கு ஒன்றை மன்னார் ஊடகவியலாளர்கள் தாக்கல் செய்யவுள்ளனர்

0 comments:

கருத்துரையிடுக