siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

இனப் பிரச்சினைக்கான தீர்வு இலங்கைக்குள்ளேயே இருக்கின்றது: ஜேம்ஸ் வார்டன்

 வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012,
இனப் பிரச்சினைக்கான தீர்வு இலங்கைக்குள்ளேயே இருக்கின்றது. என தெரிவித்துள்ள பிரித்தானிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் ஜேம்ஸ் வார்டன், அதற்கான பிரித்தானிய அரசாங்கம் தனது பங்களிப்பை நிச்சயம் வழங்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் விஜயமாக இன்று யாழ். வந்த பிரிட்டிஷ் குழுவினர் இன்று மாலை அரியாலையில் மீளக்குடிமர்ந்த பொது மக்களை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இதன்போது ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தின் உண்மை நிலைமையை அறிந்து கொள்வதற்காகவே நாம் இங்கு விஜயம் செய்துள்ளோம். மேற்குலகின் ஊடகங்களில் வெளியான செய்திகளை எம்மை இலங்கையின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இனப் பிரச்சினைக்கு உள்நாட்டிலேயே தீர்வு காணப்பட வேண்டும். வெளிநாட்டிலிருந்து தீர்வுகள் திணிக்கப்படக் கூடாது. இந்த நாட்டில் நிரந்தமான சமாதானம் ஏற்படவேண்டும். எனவே அதற்கு இந்த இனங்களின் தலைவர்கள் மனதொருமைப்பட்டு செயற்படவேண்டும்.
யாழ்ப்பாணத்திற்கான உதவிகளை பிரித்தானியா எப்போதும் செய்யும். குறிப்பாக, மீள்குடியேறி மக்களின் பிரச்சினைகளை நாம் தற்போது விளங்கிக் கொண்டுள்ளோம் என்றார்.
மேலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று அங்குள்ள உண்மையான கள யதார்த்தம் என்ன என்பதை நாங்கள் அறிந்திருக்கின்றோம். இதனை பிரித்தானியாவிலுள்ள தமிழர்களுக்கும் எடுத்துச் சொல்வோம் என பிரித்தானிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் ஜேம்ஸ் வார்டன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இக்குழுவினர் இன்று மாலை யாழ். வணிகர் சங்கப் பிரதிநிதிகளையும் வடமாகாண பிரதம செயலாளரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மேலும், நாளை கிளிநொச்சிக்கும் இவர்கள் விஜயம் செய்யவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

0 comments:

கருத்துரையிடுக