siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

சிகரெட் பெட்டியில் நோயை பிரதிபலிக்கும் கொடூர படங்கள்


சிகரெட் பெட்டியில் நோயை பிரதிபலிக்கும் கொடூர படங்கள்
வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2012,
ஜேர்மனியில் உள்ள புற்றுநோய் நிபுணர் ஒருவர் சிகரெட்டினால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோயின் தீவிரத்தை புகைபிடிப்பவருக்கு உணர்த்த தீர்மானித்துள்ளார்.
இதனை முன்னிட்டு சிகரெட் பெட்டியின் அட்டையில் புகைப்பழக்கத்தால் ஏற்படும் நோயைக்கானபடங்களை அச்சடிக்க வேண்டும், என்று அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் புகை பிடிப்பதை எதிர்த்து பல கடுமையான சட்டங்கள் அறிமுகமாகி உள்ளன. அதுபோல ஜேர்மனியிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
சிகரெட் விளம்பரத்துக்கு கடுமையான சட்டவிதிகளை அவுஸ்திரேலியா போன்ற சில உலகநாடுகள் பின்பற்றி வருகின்றன. ஆனால் ஜேர்மனியில் சிகரெட் தயாரிப்பாளரின், செல்வாக்கு மிகுதியாக இருப்பதால் புகைப்பழக்கத்தைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகள் குறைவாக இருப்பதாக மருத்துவர் மார்டினா போஷ்க்லாங்கர் கவலை தெரிவித்துள்ளார்.
சிகரெட் பெட்டியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நுரையீரல், நோயுற்ற குழந்தை, சொத்தை பற்கள், உருக்குலைந்த விந்தணு போன்ற படங்களை அச்சிட்டால் புகைபிடிக்கும் பழக்கம் குறையலாம். ஆயிரம் வார்த்தைகளால் நாம் விளக்குவதை விட இப்படங்கள் தெளிவாக விளக்கும்.
ஜேர்மனியில் சிகரெட் தயாரிப்பாளர் செல்வாக்கின் முன்பு சுகாதாரத்துறை இரண்டாம் பட்சமாகிவிடுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு புகைப்பழக்கத்தின் தீமை குறித்து ஆராய்ந்த விஞ்ஞானிகள் பலரும் கொல்லப்பட்டனர். சிலர் உயிருக்குப் பயந்து நாட்டை விட்டு ஓடிவிட்டனர். இந்நிலையே அன்று முதல் இன்று வரை ஜேர்மனியில் நீடிக்கிறது.
போஷ்க லாங்கர், DKFZ என்ற புற்று நோய்த் தடுப்பு மையத்தில் மருத்துவராக இருப்பதோடு உலக சுகாதார நிறுவனத்தின் புகைக்கட்டுப்பாடு ஒன்றிணைப்பு மையத்திலும் பணியாற்றுகிறார். ஜேர்மானிய அரசை வற்புறுத்தி வரும் பல விஞ்ஞானிகளுள் இவரும் ஒருவராவார்.
இவர், கடுமையான சட்டங்களை அவுஸ்திரேலியா போல ஜேர்மனி அறிமுகம் செய்தால் மட்டுமே, புகைப்பழக்கத்தை நிறுத்தியவர்கள் இனி அப்பழக்கத்திற்கு அடிமையாக மாட்டார்கள், புகை பிடிப்பவர்களும் பழக்கத்திலிருந்து விடுதலைப் பெறுவர்.
ஐரோப்பாவில் பொது இடத்தில் புகை பிடிக்க அனுமதிப்பதில்லை. எனவே இது குறித்த விழிப்புணர்ச்சியை ஜேர்மனியிலும் கொண்டு வரவேண்டும் என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
 </