siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

சிரியா போர்க் குற்றவாளிகளின் ரகசிய பட்டியலை தயாரித்தது ஐ.நா

18.09.2012.By.Rajah.சிரியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தொடர்பாக தனி நபர் மற்றும் குழுக்கள் அடங்கிய ரகசியப் பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. ஐ.நா.வின் முண்ணனி புலனாய்வு அதிகாரி பௌலோ சேர்ஜியோ பின்ஹெயிரோ இது பற்றிக் கூறுகையில், ஐ.நா அதிகாரிகளிடம் உறுதியான மற்றும் அசாதாரணமான சான்று கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஐ.நா.வின் பாதுகாப்புப் பிரிவு சர்வதேச குற்றவாளிகளுக்கான நீதிமன்றத்தில் (International Criminal Court - ICC) சிரியாவின் தற்போதைய நிலைமை குறித்து வாதிட வேண்டும் என கோரியுள்ளார்.
இதேவேளை சிரியாவில் தங்கியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புக் கூறுகையில், சிரியாவில் ஆயுதம் தாங்கிய போராட்டக்காரர்கள் தம்மிடம் அகப்பட்டுள்ள கைதிகளை சித்திரவதை செய்து வருவதாகவும், சிலருக்கு மரண தண்டனை கூட விதிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அரசின் ஆதரவு படைகள் மேற்கொள்ளும் போர் நிறுத்த மீறல்களே மிக அதிகளவில் பரவியிருப்பதாகவும் இவர் கூறியுள்ளார்