siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

தூதரகங்களில் பெருகிவரும் வன்முறை குறித்து அமெரிக்கத் தூதர் வருத்தம்

18.09.2012.By.Rajah.சுவிட்சர்லாந்தின் அமெரிக்க நாட்டுத் தூதரான டோனால்ட் பேயெர், ஜுரிச் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் இஸ்லாமை கேலி செய்யும் படத்துக்கு எதிரான வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். கோபம் வன்முறையாக மாறும்போது பலருக்குப் துன்பம் தருகின்றது என்று வருந்திய பேயெர் லிபியாவில் கொல்லப்பட்ட அமெரிக்கத்தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவென்ஸ் மற்றும் மூன்று அதிகாரிகளின் மரணம் குறித்து கவலை தெரிவித்தார்.
பெங்காஸி நகரில் நடந்த இந்தக் கொலை இஸ்லாமியரின் கோபம் வன்முறையாக மாறியதால் ஏற்பட்ட தீய விளைவாகும்.
'The Innocence of Muslims' என்ற அமெரிக்கத் திரைப்படத்தின் முன்னோட்டம் முகம்மது நபிகளைப் பெண்பித்தராகவும், மோசடிக்காரராகவும் காண்பித்ததால் உலகமெங்கும் அமெரிக்கத் தூதரகங்கள் முஸ்லீம்களால் தாக்கப்படுகின்றன. 14 நிமிடம் ஓடும் இந்தத் திரைப்பட முன்னோட்டத்தை சில நாடுகள் தங்கள் இணையதளங்களில் தடை செய்துவிட்டன.
பத்திரிகையாளர் பேயெரிடம் அவர் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறாரா என்று கேட்டதற்கு உலகிலேயே பாதுகாப்பான நாடு என்றால் அது சுவிட்சர்லாந்து தான் என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.
மேலும் தேவையான அளவிற்கு பல பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்