siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

காதுகளை செவிடாக்கும் வலி நிவாரண மாத்திரைகள்: பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை

18.09.2012.By.Rajah.தலைவலி மற்றும் உடல் வலிக்காக பெண்கள் பயன்படுத்தும் சாதாரண வலி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இதற்காக 62 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் வலி நிவாரண மாத்திரை சாப்பிட்ட 13 சதவிகிதம் பெண்களின் காது கேட்கும் திறன் குறைந்துள்ளது தெரியவந்தது.
அவற்றில் ஒரு ரக மாத்திரையை வாரத்துக்கு 2 தடவை உபயோகித்தால் 24 சதவிகிதம் செவிட்டு தன்மையும், மற்றொரு ரக மாத்திரையை வாரத்துக்கு 6 தடவை பயன்படுத்தினால் 21 சதவிகிதம் செவிட்டு தன்மையும் ஏற்படுவதாகவும், அதேநேரத்தில் ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிடும் பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதில்லை என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது