siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

இலங்கைப் பொருளாதாரம்

23.09.2012.By.Rajah

இந்த ஆண்டு முழுவதற்குமான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதமானது 6.75 - 7.2 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுகின்றது. இதனை இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் பி.வி.ஜெயசுந்தர கடந்த வியாழனன்று ராய்டர்ஸ் செய்திச் சேவைக்குத் தெரிவித்திருந்தார்.


சென்ற ஆண்டில் (2011), இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதமானது 8.3 சதவீதம் எனக் காணப்பட்டதுடன், இந்த ஆண்டின் முதலாவது காலாண்டில் 7.9 சதவீதம் என நல்ல நிலையில் பதிவாகியது. ஆயினும், உலக சந்தையில் எண்ணை விலை உயர்வு மற்றும் உலக பொருளாதார மந்த நிலமைகளினால் இந்த ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி வீதமானது 7.2 சதவீதம் என்றளவிலேயே காணப்படும் என மத்திய வங்கி முன்னதாக தெரிவித்திருந்தது.

இதேவேளை, இந்த ஆண்டில் தொடரும் கால நிலை வரட்சியினால் விவசாய உற்பத்திகளின் பாதிப்பு மற்றும் நீர் மின் உற்பத்தியில் தொடரும் வரட்சி நிலைமைகள் போன்றன ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி வீதத்தினைப் பாதித்துள்ளன. இதனால், இந்த ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 6.75 சதவீதம் என்றளவு வளர்ச்சி காணவே வாய்புள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கடந்த யூன் மாதம் எதிர்வு கூறியுள்ளது.

எது எவ்வாறாயினும், கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.9 சதவீதம் எனக் காணப்பட்ட இலங்கையின் வரவு செலவுத் திட்டப் பற்றாக் குறையினை, இந்த ஆண்டில் 6.2 சதவீதம் எனக் குறைப்பதற்கு நிதி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இத்தகைய செலவுச் சிக்கனமானது, அரசின் சமூக நலச் செலவுகளில் பெருமளவு குறைப்பினைக் கொண்டு வருமாயின் அது, இலங்கையின் நீண்ட காலப் பொருளாதார வளர்ச்சிக்கு நன்மையளிப்பதாக அமையும்.