siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 16 அக்டோபர், 2012

கனடா: நயாகராவில் 5 வயது பெண் குழந்தையை

     Tuesday 16 October 2012 .By.Raja.. கடித்து குதறிய நாய்களின் கூட்டம்.
நயாகரா நகரில் வெள்ளிக்கிழமை இரவில் நாய்களின் கூட்டம் ஒன்று ஐந்தே வயதான குழந்தையை கடித்து குதறியது. அதனால் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கவலையுடன் தெரிவிக்கின்றன.

நயாகராவில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் தங்கள் வீட்டின் முன் இருந்த சிறிய நாய்க்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது குழந்தையை அங்கு வந்த பெரிய நாய்களின் கூட்டம் ஒன்று திடீரென கடித்து குதறியது. இதனால் கதறி அழுத குழந்தையை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காப்பாற்றினார்கள். பின்னர் 911 தொலைபேசி மூலம் காவல்துறையினருக்கும், குழந்தையின் பெற்றோர்களுக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் குழந்தை அருகிலுள்ள Welland County General Hospital  மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். குழந்தையின் நிலைமையை கவலையுடன் பார்த்த மருத்துவர்கள் தற்போது எதுவும் உறுதியாக கூற முடியாத நிலையில் குழந்தை இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.


நயாகரா தெருவில் அதிகமாக நாய்கள் நடமாடிக் கொண்டிருப்பதாகவும், அவைகள் தெருவில் நடந்து போகும் மனிதர்களை பல சமயங்களில் அச்சுறுத்திக் கொண்டிருப்பதால், இதுகுறித்து மாகாண நிர்வாகம் சீரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.{Monday 15 October 2012 }