siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 16 அக்டோபர், 2012

அமெரிக்க பல்கலை பேராசிரியர்களுக்கு

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு.அமெரிக்காவை சேர்ந்த, ஆல்வின் ரோத், லாய்டு ஷெப்லே ஆகியோருக்கு, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. இலக்கியம், பொருளாதாரம், இயற்பியல், ரசாயனம், மருத்துவம் ஆகிய துறைகளில், சாதனை படைப்பவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம், மருத்துவம், இயற்பியல், ரசாயனம், இலக்கியம் ஆகிய துறையை சார்ந்த நிபுணர்களுக்கு, நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான பரிசு, ஐரோப்பிய யூனியனுக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த ஆல்வின் ரோத், லாய்டு ஷெப்லே ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை கழகத்தின், பொருளாதார பேராசிரியராக இருப்பவர் ஆல்வின் ரோத். கலிபோர்னியா பல்கலை கழக பேராசிரியர் ஷெப்லே. "நிலையான வினியோகம் மற்றும் சந்தை விற்பனை நடைமுறை' குறித்து, இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியை பாராட்டி, இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது