siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 22 அக்டோபர், 2012

ஈரானுடன் பேச்சுவார்த்தையா? அமெரிக்கா மறுப்பு

திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012, By.Rajah.
அணு ஆயுத திட்டம் குறித்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரான் இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் குற்றம் சுமத்தி வருவதுடன், பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவும், ஈரானும் கொள்கை அளவில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவிக்காலம் தொடங்கிய போது முதலில் நடத்தப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரை பேச்சுவார்த்தையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஈரான் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பேச்சுவார்த்தை தொடர்பாக இரு தரப்பும் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் நகல்கள், அமெரிக்கப் பிரதிநிதிகள் அடங்கிய சிறிய குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த செய்தியை அமெரிக்கா மறுத்துள்ளதுடன், அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் டாமி வீட்டர் கூறுகையில், ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு அமெரிக்காவும், ஈரானும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுவது உண்மையல்ல.
எனினும் ஈரானின் அணு ஆயுதத் திடடம் குறித்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒபாமா நிர்வாகம் தயாராகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்