siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 13 டிசம்பர், 2012

ஜெஸிந்தா தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில் என்ன உள்ளது?

லண்டனில் மர்மமான முறையில் மரணமடைந்த செவிலியர் ஜெஸிந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை பிரிட்டன் பொலிசார் இன்று வெளியிடுகின்றனர். பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன் கர்ப்பமாக உள்ளார். இவர் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கியிருந்தார்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த வானொலி நிலையமொன்று அரசு குடும்பத்தினர் போன்று பேசி, இளவரசி குறித்த தகவல்களை சேகரித்தனர்.
இந்த அழைப்பு செவிலியர் ஜெஸிந்தா தான், இளவரசி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு இணைப்பு கொடுத்தார் என்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தால் பயந்து போன ஜெஸிந்தா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஸ்காட்லாந்து பொலிசார் விசாரணை நடத்தி ஜெஸிந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை இன்று வெளியிடுகின்றனர்.
அவரது உடலை கர்நாடக மாநிலம் மங்களூருக்கு கொண்டு வருவதற்கு, பிரிட்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஜெஸிந்தா கணவருக்கு உதவ முன்வந்துள்ளனர்.
குறும்பு தனமான தகவலை ஒலிபரப்பிய, அவுஸ்திரேலிய வானொலி அறிவிப்பாளர்கள் மெல் க்ரெய்க் மற்றும் மைக்கேல் கிறிஸ்டியன் ஆகியோர் தாங்கள் செய்த செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஜெஸிந்தா, இறப்பதற்கு முன்பு குறிப்பு எழுதி வைத்து விட்டு சென்றதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் அக்கடிதத்தில் என்ன உள்ளது என்பதை கணவர், ஊடகங்களுக்கு தெரிவிக்க மறுத்துவிட்டார். இருப்பினும் தற்கொலைக்கான காரணம் குறித்து அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் அவரது மரணம் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே ஜெஸிந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை பிரிட்டன் பொலிசார் இன்று வெளியிடுகின்றனர்

0 comments:

கருத்துரையிடுக