siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 13 டிசம்பர், 2012

அமெரிக்கா பிரஜை ஒருவர் வடகொரியாவில்

 
வடகொரியாவில் சந்தேகத்தின் பேரில் அமெரிக்க பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளிவிவகாரத்துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலாண்ட் கூறுகையில், வடகொரியாவில் அமெரிக்க பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் தகவல் எங்களுக்கு உறுதிபட தெரியவந்துள்ளது.
அமெரிக்க பிரஜைகளின் நலனை காப்பதை தவிர எங்களுக்கு வேறெந்த முக்கியத்துவமும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
வடகொரியாவுடன் அமெரிக்காவுக்கு தூதரக உறவு கிடையாது என்பதால், அந்நாட்டில் உள்ள அமெரிக்க மக்களின் பிரச்னைகளை கையாளும் அதிகாரத்தை அங்குள்ள சுவீடன் தூதரகத்துக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த கென்னத் பய் என்ற சுற்றுலா ஏற்பாட்டாளர், நவம்பர் மாத தொடக்கத்தில் வடகொரியாவில் கைதுசெய்யப்பட்டார். ஐந்து நாள் பயணமாக அங்கு சென்றிருந்த அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

கருத்துரையிடுக