siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

.பிறமாவட்டங்களுக்குச் செல்லும் அரச பஸ்களில் உள்ளூர் பயணிகள்; இ.போ.ச. வடபிராந்திய

13.08.2012. 

 
 யாழ். நகரிலிருந்து பிறமாவட்டங்களுக்குச் செல்லும் அரச பஸ்களிலும் சரி பிறமாவட்டங்களிலிருந்து யாழ். நகருக்குவரும் அரச பஸ்களிலும் சரி உள்ளூர் பயணிகள் பயணிக்கமுற்பட்டால் அவர்களை ஏற்றிச் செல்லல் வேண்டும்.

பயணிகளை ஏற்றாமல் சென்று அவர்களுக்கு போக்குவரத்து நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடாது என்று இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் எஸ்.ஏ.அஸ்ஹர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
யாழ்ப்பாணத்துக்கும் கொடிகாமத்துக்கும் இடையிலான அரச பஸ் போக்குவரத்துப் பணி திருப்திகரமாக இல்லை. அதனால் இடையூறுகளை எதிர்கொள்வதோடு அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள், யாழ். போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் எனப் பலரும் நேர தாமதமாகவே உரிய இடங்களுக்குச் செல்ல வேண்டியநிலை ஏற்படுகிறது.

காலை மற்றும் பிற்பகல் வேளைகளில் இரண்டு இடங்களுக்குமான போக்குவரத்தும் குழப்ப நிலையிலுள்ளது. சிலவேளைகளில் பஸ்கள் பணியில் ஈடுபடுவதில் குறித்த நேர முகாமைத்துவம் பின்பற்றப்படுவதில்லை. அதனால் தாம் பாதிக்கப்படுவதாக பயணிகள் முறையிட்டுள்ளனர்.

பஸ்ஸுக்காக காத்திருக்கும் போதுகாலையில் பிறமாவட்டங்களிலிருந்து யாழ். நகருக்கு வரும் அரச பஸ்கள் அநேகமானவை உள்ளூர்ப் பயணிகளை ஏற்றாமல் பயணிக்கின்றன.'
பஸ்கள் பயணிகளை ஏற்றாமலேயே செல்கின்றன.

அதேபோன்று யாழ். நகரில் இருந்து கொடிகாமத்துக்கான இரவு நேர பஸ்சேவை உரிய முறையில் இடம்பெறவில்லை. அவ்வாறு பணிக்கு விடப்படும் பஸ்கள் உரிய நேரத்துக்குப் புறப்படுவதில்லை என்றும் முறைப்பாடு கிடைத்துள்ளது. இனிவரும் காலங்களில் பிறமாவட்டங்களில் இருந்து வரும் அல்லது பிறமாவட்டங்களுக்குச் செல்லும் அரச பஸ்கள் உள்ளூர் பயணிகளையும் ஏற்ற வேண்டும் என்று மேலும் கூறினார்

0 comments:

கருத்துரையிடுக