siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

ஈழத்தமிழர் காவியம் படைக்காமல் ஓயேன்; வைரமுத்து சபதம்

13.08.2012.

 
கவிஞர் வைரமுத்து எழுதிய "மூன்றாம் உலகப் போர்'' என்னும் நூலைத் திறனாய்வு செய்த வைரமுத்துவின் மகன் கபிலன், இதுவரை எத்தனையோ இலக்கியங்கள், கவிதைகள், நூல்கள் படைத்த என் தந்தைக்கு இந்த விழா மூலம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

அவர் ஈழத் தமிழர்களின் அவலம் குறித்து ஒரு காவியம் எழுத வேண்டும். அது அவர்களின் பிரச்சினைகளை உலகுக்கு உணர்த்துவதாக அமைய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

கடந்த 4 ஆம் திகதி தேனியில் நடைபெற்ற கவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப் போர் என்னும் நூல் திறனாய்வு நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விழாவில் அடுத்துப் பேசிய கம்பம் செல்வேந்திரன், மூன்றாம் உலகப் போர். இது கவிஞரின் 36ஆவது நூல்.

புத்தகமாக வெளிவந்த மூன்று மாத காலத்திற்குள் மூன்று பதிப்புகளைக் கண்டுவிட்டது. எனவே, கபிலன் வைத்த கோரிக்கையை நினைவில் வைத்து, ஈழத் தமிழர் காவியம் படையுங்கள் என்று தன் பங்குக்கும் வேண்டுகோள் வைத்தார்.

இவ்விழாவில் இறுதியாக உரையாற்றிய கவிஞர் வைரமுத்து எல்லோரும் மகனிடம்தான் வேண்டுகோள் வைப்பார்கள். ஆனால், என் மகன் என்னிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறான். நிச்சயமாக, ஈழத் தமிழர் அவலம் குறித்து காவியம் எழுதாமல் நான் போகமாட்டேன் என்றார்

0 comments:

கருத்துரையிடுக