siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

கமல், ஸ்ரீதேவி, மீனா ஆகியோர் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த ரகசியம்!

13.08.2012.நான்கு வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் கமல்ஹாசன். “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே…” பாடல் காட்சியை படம் பண்ணும்போது ஒரு ஷாட் எடுத்து விட்டு அடுத்த ஷாட்டிற்கு தேடினால் ஆள் இருக்கமாட்டான். சினிமா மீது அவருக்கு அப்பொழு‌தே ஆர்வம் அதிகம். அதனால் ஏ.வி.எம். ஸ்டுயோவிற்குள் இருக்கும் ப்ரிவியூ தியேட்டரில் ஏதாவது ஒரு படத்தை பார்க்க பறந்திருப்பான். உள்ளே படவேலைகள் நடந்து கொண்டிருக்கும். ஏதாவது ஒரு படமோ, வி.ஐ.பி.களுக்காக திரையிடப்படும் ஒரு படத்தையோ பார்க்க குறிப்பிட்ட நபர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி இருக்காது. அதனால் சிறுவன் கமல், ஆப்ரேட்டர் ரூமிற்குள் போய் அங்கு இருக்கும் துவாரங்களின் வழியாக படக்காட்சிகளை பார்த்துக் கொண்டிருப்பான். அந்த கமலை அவரது சித்தப்பா சந்திரஹாசன்(சாருஹாசனின் தம்பி) தேடிக் கண்டுபிடித்து சூட்டிங் ஸ்பாட்டுகளில் கமலை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்வார். சந்திரஹாசன் இருந்ததால், ஏ.வி.எம்., நிறுவனத்தில் பணிபுரிந்த எங்களுக்கு அந்த சிறுவனிடம் வேலை வாங்குபவது சுலபமாக இருந்தது.
அதேமாதிரிதான் நான் இயக்கிய கனிமுத்து பாப்பா படத்தில் குழந்தை நட்சத்திரமாக மின்னிய ஸ்ரீதேவியை பார்த்துக்கொண்டு, அவரிடம் வேலை வாங்கிய அவரது தாயார் ராஜேஸ்வரியம்மா. அதுபோல அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் கிட்டத்தட்ட ரஜினி மகளாகவே வந்து போன மீனா, அவருடன் எஜமான் படத்தில் அவருக்கே ஜோடியாகவும் நடித்தார். மீனாவுக்கும் அவரது தாயார் ராஜமல்லிகா பெரும் உதவியாக இருந்தார். இதுதான் கமல், ஸ்ரீதேவி, மீனா ஆகியோர் குழந்தை நட்சத்திரமாக இருந்து இப்போது பெரிய நடிகர்களாக ஜொலித்தற்கு காரணமாக அமைந்தது.
இங்கு தாயுள்ளத்துடன் 85 குழந்தைகள் நடனம், அதுவும் பரதம் ஆட காரணமாக இருப்பவர் நிருத்திய தர்ஷன் டான்ஸ் அகடாமியின் குரு உஷா நாகராஜூ. மறைந்த நடனக் கலைஞர் சுந்தரம் அவர்களின் பேத்தியான உஷா நாகராஜூ, கடந்த 13 வருடங்களாக இப்படி ஒரு நடனப்பள்ளியை தொடங்கி பிரமாதமாக நடத்தி வருவதுடன் இதுமாதிரி குழந்தைகள் நடன நாட்டிய நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தி வருவதால், பெற்றோர்களான நாமெல்லாம் பிள்ளைகளை அவரிடமே விட்டுவிட்டு நடனம் பயில செய்ய வேண்டும் என்பது என் எண்ணம்! இதுமாதிரி குழந்தைகளுக்கு கல்வி மட்டுமல்லாது அதையும் தாண்டி நடனம், பாட்டு போன்ற பிற கலைகளிலும் ஆர்வம் காட்ட பெற்றோர்கள் உதவினால் அவர்கள் தப்பான வழிகளுக்கு போகும் எண்ணமே வராது. இங்கு ஆடிய குழந்தைகள் அனைவரும் தாளம் தப்பாமல், பிரமாதமாக பரதநாட்டியம் ஆடியதற்கு காரணமான உஷா மற்றும் அவரது நடன பள்ளி ஆசிரியர்களுக்கும் என் பாராட்டுக்கள் என்றெல்லாம் பேசியவர் பழம்பெரும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.
சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற்ற, அதுவும் மார்கழி இசை-நாட்டிய விழாவாக நடைபெற்ற இவ்விழாவில் காமராஜ் மற்றும் முதல்வர் மகாத்மா படங்களில் காந்தியாக நடித்திருக்கும் காந்தி கனகராஜ்! உரத்த சிந்தனை ஆசிரியர் உதயன்ராம் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு நிருத்திய தர்ஷன் டான்ஸ் அகடாமியின் 12வது ஜூனியர் ஆண்டு விழாவில் ஆடிய குழந்தைகளை வாழ்த்தி பரிசளித்தனர். விழாவின் இறுதியின் உஷா நாகரஜூ நன்றி கூறினார்

0 comments:

கருத்துரையிடுக