siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

சுவாசிலாந்து நாட்டில் குடியுரிமை நிராகரிக்கப்பட்ட இலங்கை அகதி தற்கொலை முயற்சி

13.08.2012.சுவாசிலாந்து அரசாங்கம் குடியுரிமை வழங்க மறுத்தமையால் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
மேபானில் வசிக்கும் நவரத்னம் மதன் (34)  என்பவர் தனது கோரிக்கையினை முன்வைத்து அந்நாட்டு அரசருக்கு கடந்த ஏப்ரல் மாதம் கடிதம் எழுதியிருந்தார்.
ஆயினும் அதற்கான பதில் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.
மதன் 2003ம் ஆண்டு சுவாசிலாந்து நாட்டிற்கு வருகை தந்தார். ஆகஸ்ட் 17 2004 ஆண்டு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது.
இவர் தன்னுடைய மாமாவுடன் வசித்து வருகின்றார். மாமா சுவாசிலாந்தில் தற்பொழுது ஆசிரியராக பணிபுரிகின்றார்.
2007 ம் ஆண்டு முதன் முறையாக குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தார்.
மார்ச் 11 2009 தன்னுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கடிதம் அனுப்பப்பட்டது.
அக் கடிதத்தில் சுவாசிலாந்து நாட்டிற்கான மதனின் முதலீடு குறைந்தளவில் இருப்பதனால் குடியுரிமை நிராகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசர் மாபிக்சா டலாமினின் கையொப்பமும் இடப்பட்டிருந்தது
மதன் எழுதிய கடிதத்தில் தான்நாட்டில் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்ததாகவும் தொடர்ச்சியாக காட்டில் வாழ்ந்ததாகவும் தான் பலவந்தமாக இயக்கத்தில் இணைக்கப்பட்டு துன்பங்களை அனுபவித்ததாகவும் கூறியுள்ளார்

0 comments:

கருத்துரையிடுக